“ வாழ்க பெரியார்... வாழ்க காமராஜர் ”- நாடாளுமன்றத்தில் ஒலித்த குரல்கள்..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் தமிழிலேயே பதவியேற்றனர்.


Advertisement

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில் பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட 313 பேர் எம்.பி.க்களாக பதவியேற்றுக் கொண்டனர். இந்நிலையில் தமிழக எம்.பி.க்கள் இன்று பதவியேற்றனர். அப்போது தமிழக எம்.பி.க்கள் அனைவரும் தமிழிலேயே பதவியேற்றக் கொண்டனர். பதவியேற்பின்போது பெரும்பாலானோர் ‘தமிழ் வாழ்க’, ‘ தமிழ்நாடு வாழ்க’ என தெரிவித்தனர்.


Advertisement

சிதம்பரம் தொகுதி எம்.பியான திருமாவளவன் பதவியேற்கும்போது, “ வாழ்க அம்பேத்கர், வாழ்க பெரியாளர், வெல்க சமத்துவம், ஜனநாயகம் ” என தெரிவித்தார். தூத்துக்குடி தொகுதி எம்.பியான கனிமொழி பதவியேற்கும்போது, “ வாழ்க தமிழ்.. வாழ்க பெரியார்..” எனக் கூறினார். இதேபோல தருமபுரி எம்.பி செந்தில்குமார் கருப்புச் சட்டை அணிந்தே பதவியேற்றார். அப்போது அவர், “திராவிடம் வெல்க” எனக் கூறினார்.

தயாநிதிமாறன் “தமிழ் வாழ்க , பெரியார் வாழ்க, கருணாநிதி வாழ்க” என முழங்கினார். விழுப்புரம் தொகுதி எம்பி ரவிக்குமார் “ வெல்க தமிழ் வாழ்க அம்பேத்கர்” என கூறி பதவி பிரமாணம் எடுத்து கொண்டார். திமுக எம்பிக்கள் எஸ் ஆர் பார்த்திபன், கவுதம் சிகாமணி ஆகியோர் “வாழ்க தளபதி” என முழக்கமிட்டனர். 


Advertisement

கன்னியாகுமரி மக்களவை தொகுதி எம்.பியான வசந்தகுமார் பதவியேற்கும்போது, “ ஜெய் ஜவான்.. ஜெய் கிசான்..வாழ்க காமராஜர், வாழ்க ராஜீவ்காந்தி” என தெரிவித்தார். தேனி மக்களவை தொகுதி எம்.பியான ரவீந்திரநாத் குமார் பதவியேற்பின்போது, “ வாழ்க புரட்சித் தலைவர் எம்ஜிஆர், வாழ்க புரட்சித் தலைவி ஜெயலலிதா, வந்தே மாதரம், ஜெய்ஹிந்த்” எனக் கூறினார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement