அங்கன்வாடி பணியாளர்கள் சர்ச்சை - மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அங்கன்வாடியில் பட்டியல் இன பெண்கள் பணியாற்ற எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் மாவட்ட ஆட்சியருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 


Advertisement

மதுரை மாவட்டத்தில் அங்கன்வாடி உள்ளிட்ட 1,550 பணியாளர்களுக்கு கடந்த 3ஆம் தேதி மாவட்ட பொறுப்பு ஆட்சியர் சாந்தகுமார் பணியாணை வழங்கினார். எஸ். வலையப்பட்டி கிராம அங்கன்வாடியில் சத்துணவு அமைப்பாளராக பட்டியலினப் பெண் நியமனம் பெற்றார். சத்துணவு உதவியாளர் மற்றும் சமையலராக மற்றொரு பெண் நியமிக்கப்பட்டார்.


Advertisement

எஸ். வலையப்பட்டியில் பணியில் சேர்ந்த மறுநாளே இரு பெண் பணியாளர்களுக்கும், அங்கு ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறுப்படுகிறது. அவர்கள் சமைத்தால் அங்கன்வாடிக்கு தங்கள் குழந்தைகளை அனுப்ப மாட்டோம் என வேறு பிரிவினர் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் புகார் தெரிவித்ததாக தெரிகிறது. 

இருவரையும் அழைத்து பேசிய அதிகாரிகள், அவர்கள் இருவரையும் கிழவனூர் மற்றும் மதிப்பனூருக்கு கூடுதல் பணியாக பணியாற்ற வாய்மொழி உத்தரவிட்டனர். பிரச்னை முடிந்த பிறகு இருவரையும் மீண்டும் அதே இடத்தில் பணியாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்ததாக தெரிகிறது. இதுபற்றி அதிகாரிகளிடம் கேட்டபோது, பட்டியலினப் பெண்கள் நியமனத்தில் கிராமத்தில் எந்தப் பிரச்னையும் இல்லை எனவும் கூடுதல் பொறுப்பாகவே அவர்களுக்கு கிழவனூர், மதிப்பனூர் பணி தரப்பட்டதாகவும் கூறினர். 


Advertisement

இந்நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியருக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், நெருக்கடிகளுக்கு பணிந்து அங்கன்வாடி பணியாளர்களை இடமாற்றம் செய்தது ஏன் எனக் கேள்வி எழுப்பியுள்ளது. நான்கு வாரங்களுக்குள் மாவட்ட ஆட்சியர் அறிக்கை அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கபப்ட்டுள்ளது. 

loading...

Advertisement

Advertisement

Advertisement