நோய் பாதிக்கப்பட்ட சிறுவனை 8 கி.மீ., சுமந்து சென்ற சிஆர்பிஎஃப் வீரர்கள்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சத்தீஸ்கர் மாநிலத்தில் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனை சிஆர்பிஎஃப் வீரர்கள் எட்டு கிலோ மீட்டர் தூரம் சுமந்து சென்றுள்ளனர். 


Advertisement

நக்சல் அமைப்பினர் அதிகம் காணப்படும் சுக்மா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 13 வயது சிறுவனுக்கு மஞ்சள் காமாலை நோய் பாதிக்கப்பட்டது. சாலை மற்றும் மருத்துவ வசதி இல்லாத அந்த கிராமத்தில் சிறுவன் நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. 


Advertisement

இதையடுத்து அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு சிறுவன் குறித்த நிலைமை தெரியவந்தது. உடனே  சிறுவனுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சிஆர்பிஎஃப் வீரர்கள் உதவியுள்ளனர். ‌‌

சோர்வாக நடக்கமுடியாமல் தவித்த அந்த சிறுவனை ஒரு கட்டிலில் வைத்து இரு சிஆர்பிஎஃப் வீரர்கள் என நான்கு பேர் மாறி‌மாறி எட்டு கிலோ மீட்டர் வரை சுமந்து சென்றனர். நக்சல் பாதிக்கப்பட்ட பகுதி என்பதால் செல்லும் வழியில் வெடிகுண்டுகள் ‌இருக்கின்றனவா என்று சோதனை செய்தவாரே அவர்கள் சென்றனர். இது அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 
 

வீடியோ

loading...

Advertisement

Advertisement

Advertisement