ஹெல்மெட் அணியாதோரின் ஓட்டுநர் உரிமத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
மோட்டார் வாகன சட்டப்படி இருசக்கர வாகனத்தில் செல்வோர் ஹெல்மெட் அணிய வேண்டும், நான்குசக்கர வாகனங்களில் செல்வோர் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்ற விதிகளை முழுமையாக அமல்படுத்த உத்தரவிடக் கோரி கே.கே.ராஜேந்தி ரன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து பயணிப்பவர்கள் ஒருவர் கூட ஹெல்மெட் அணிவதில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர். டெல்லி, பெங்களூரில் கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்தும் போது தமிழகத்தில் மட்டும் அமல்படுத்த முடியாதது ஏன் என்றும் வினவினர். இதற்கு ஹெல்மெட் அணியாதது தொடர்பாக கடந்த 6 மாதங்களில் 4 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக அரசு பதில் அளித்தது.
ஹெல்மெட் அணியாதவர்களுக்கு 100 ரூபாய் மட்டுமே அபராதம் விதிக்கப்படுகிறது, அதனை அதிகரிப்பதற்கான சட்டத்திருத் தம் நாடாளுமன்றத்தில் நிலுவையில் இருப்பதாக அரசு தெரிவித்தது. அப்போது ஹெல்மெட் அணியாதோரின் ஓட்டுநர் உரிமத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது என நீதிபதிகள் வினவினர். அதற்கு உயர்நீதிமன்ற உத்தரவுப்படி மோட்டார் வாகன சட்ட விதிகள் கண்டிப்பாக அமல்படுத்தப்படுகின்றன என அரசு கூறியது.
அப்போது ஹெல்மெட் அணியாத காவல்துறையினர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அரசு, ஹெல்மெட் அணியாத காவல்துறையினர் பணியிடைநீக்கம் செய்யப்படுவதாக கூறியது. இதையடுத்து வழக்கு விசாரணையை புதன்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.
Loading More post
விவேக்கின் இடத்தை இனி எவராலும் நிரப்ப முடியாது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்
விவேக்கின் இதயம் பலவீனமாக இருந்ததால் சிகிச்சை பலனளிக்கவில்லை - சிம்ஸ் மருத்துவமனை விளக்கம்
வேளச்சேரி 92வது வாக்குச்சாவடியில் விறுவிறுப்பான மறு வாக்குப்பதிவு!
மேற்கு வங்கம் : தொடங்கியது 5ஆம் கட்ட வாக்குப்பதிவு
5 முறை சிறந்த காமெடியன்; 3 முறை பிலிம்ஃபேர் : நகைச்சுவையில் முத்திரை பதித்த விவேக்!
இந்தியாவில் இருந்து வெளியேறுகிறது 'சிட்டி பேங்க்' - சேவையில் பாதிப்பு இல்லை... ஏன்?
டாஸ் வென்றால் பீல்டிங் தேர்வு... தப்புக் கணக்கு போடும் அணிகள்... மாறும் முடிவுகள்!
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்