தங்கையை புகைப்படம் எடுத்தவரை கண்டித்த மாணவனுக்கு நேர்ந்த கொடுமை !

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஓமலூர் அருகே தங்கையை போட்டோ எடுத்த வாலிபரை, தட்டி கேட்ட மாணவனை கடத்தி சென்று சித்ரவதை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


Advertisement

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள ரெட்டியூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் தங்கராஜ்-ஜோதி தம்பதியினர். கூலி தொழில் செய்துவரும் இவர்களுக்கு ஹரிஹரன் (17) என்ற மகன் உள்ளார். இவர் சேலத்தில் உள்ள அரசு தொழில்பயிற்சி மையத்தில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். தங்கராஜ் ஏற்கெனவே இறந்துவிட்ட நிலையில் தாய் ஜோதி, கூலி வேலை செய்து தனது மகனை படிக்க வைத்து வருகிறார். 

Image result for abuse


Advertisement

இந்நிலையில் ஹரிஹரனின் 14 வயது தங்கை உறவு பெண்னை அதே பகுதியை சேர்ந்த ரஞ்சித் என்பவர், செல்போனில் படம் பிடித்து தனது நண்பர்களிடம் காட்டி வந்துள்ளார். இதையறிந்த ஹரிஹரன், இது போன்று சிறுமிகளை படம் பிடிக்கக்கூடாது எனக் கூறி கண்டித்தார். மேலும், அவரது உறவினர்களிடம் கூறி இளைஞர் ரஞ்சித்தின் செல்போனில் இருந்த தனது தங்கையின் புகைப்படத்தை அழிக்கச் செய்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த ரஞ்சித், அவரது தம்பி ராஜேஷ், அவரது நண்பர் செல்வராசன் ஆகியோர் ஒன்று சேர்ந்து நேற்று இரவு 7 மணியளவில் வெளியில் சென்ற மாணவர் ஹரிஹரனை வாயில் துணியை அடைத்து கடத்திச் சென்றுள்ளனர். பின்னர் அங்குள்ள பாறைக்கு கொண்டு சென்ற ஹரிஹரனை கட்டிபோட்டு ஊசியால் உடல் முழுவதும் சுமார் 50 இடங்களில் குத்தி சித்ரவதை செய்துள்ளனர்.மேலும், பாறை மேல் இருந்து கீழே தள்ளி கொலை செய்யவும் முயன்றுள்ளனர். மாணவனின் வாயை துணியால் அடைத்ததால் கூச்சலிட முடியாமல் அவர் முனகினார். 

Image result for abuse

அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த பெண் ஒருவர் முனகல் சத்தம் கேட்டதை அறிந்து அருகில் சென்று பார்த்துள்ளார். அப்போது, 3 பேரும் மாணவனை அடித்துக்கொண்டு இருந்ததை கண்டு சத்தம் போட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இதைப்பார்த்த 3 பேரும் அங்கிருந்து தப்பியோடினர். இதைத்தொடர்ந்து  மாணவரை மீட்ட உறவினர்கள் ஓமலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு மாணவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மாணவர் ஹரிகரன் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தீவட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால், இத்தகைய செயலில் ஈடுபட்ட 3 பேரையும் கைது செய்யாமல் சுணக்கம் காட்டி வருவதாக மாணவரின் உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி ஊசியால் குத்தி சித்ரவதை செய்த மூன்று இளைஞர்களையும் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊர் பொதுமக்கள் வேண்டுக்கோள் விடுத்துள்ளனர்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement