“தன்னாட்சி என்பதற்கு இதுதான் அர்த்தம்” - ஏ.ஆர்.ரஹ்மான் அடுத்த ட்வீட்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழு சமீபத்தில் புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசிடம் சமர்பித்தது. அதில், மூன்று மொழிக் கொள்கையை கடைபிடிக்க பரிந்துரைக்கப்‌பட்டுள்ளது. அதன்படி இந்தி மொழி இல்லாத மாநிலங்களில் இந்தி பாடத்திட்டம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதேபோல, இந்தி மொழி பேசும் மாநிலங்களில், இந்தி, ஆங்கிலம் தவிர பிற பகுதிகளில் ஏதேனும் ஒரு மொழியை கூடுதலாக கற்பிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த மும்மொழிக் கொள்கைக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் பலரும் மொழி திணிப்பை ஏற்க முடியாது எனக் கருத்து தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, மூன்றாவது மொழியாக இந்தி கட்டாயமில்லை எனவும், மாணவர்களே தங்களுக்கான மூன்றாவது மொழியை தேர்வு செய்து கொள்ளலாம் எனவும் மத்திய அரசு கல்விக் கொள்கையில் திருத்தம் செய்தது.


Advertisement

           

இந்தி மொழி திணிப்பு விவகாரம் தொடங்கியது முதலே ஏ.ஆர்.ரஹ்மான் தொடர்ச்சியாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இந்தி கட்டாயம் என சர்ச்சையாக பேசப்பட்ட நேரத்தில், ''பஞ்சாபிலும் தமிழ் பரவுகிறது'' எனப் பதிவிட்டு பஞ்சாப்பை சேர்ந்த ஒருவர் தமிழ் பாடலை பாடும் வீடியோவை ஏ.ஆர்.ரகுமான் பகிர்ந்திருந்தார். பின்னர், மத்திய அரசு தன்னுடைய வரைவில் திருத்தம் கொண்டு வந்ததை அடுத்து, ''தமிழகத்தில் இந்தி கட்டாயமல்ல என்ற திருத்தப்பட்டது புதிய வரைவு அழகிய தீர்வு'' எனத் தெரிவித்து இருந்தார் ரஹ்மான். 


Advertisement

         

இந்த நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது மீண்டும் மற்றொரு முக்கியமான ட்விட்டர் பதிவிட்டுள்ளார். அதில், “AUTONOMOUS” என்ற ஆங்கில வார்த்தைக்கான கேம்பிரிட் டிக்ஸ்னரியின் அர்த்தம் இதுதான் என்று அதில் குறிப்பிட்டிருந்தார். அந்த ஆங்கில வார்த்தைக்கு தன்னாட்சி அல்லது சுயாட்சி என்பது அர்த்தம். எந்த தலையீடும் இல்லாமல் சுதந்திரமாக ஆட்சி செய்வது என்பதுதான் அதற்கு அர்த்தம். தமிழக அரசியலில் அண்ணா காலத்தில் அதிகமாக தன்னாட்சி முழக்கம் எழுப்பப்பட்டது. தற்போது திடீரென ரஹ்மான் இந்த வார்த்தையை பதிவிட்டுள்ளார். 

 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement