இளம் பெண் பாலியல் புகார்: கால்பந்துவீரர் நெய்மர் மறுப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தன் மீது இளம் பெண் ஒருவர் கொடுத்துள்ள பாலியல் புகார், பணம் பறிப்பதற்காக நடக்கும் நாடகம் என கால்பந்துவீரர் நெய்மர் தெரிவித்துள்ளார்.


Advertisement

பிரபல நட்சத்திர கால்பந்துவீரர் நெய்மர். பிரேசிலை சேர்ந்த இவர், இப்போது பாரிஸ் செயின்ட் - ஜெர்மன் அணிக்காக விளையாடி வருகிறார். கால்பந்து போட்டியில் பங்கேற்பதற்காக மே மாதம் பாரிஸ் சென்றார். இன்ஸ்டாகிராம் மூலம் தனக்கு பழக்கமான சேர்ந்த இளம்பெண்ணை பாரிஸ் வரவழைத்தார்.


Advertisement

பின் அங்குள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில், கடந்த 15 ஆம் தேதி குடிபோதையில், நெய்மர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக, அந்தப் பெண், சாவ் பாலோ போலீசில் புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து, நெய்மர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த பாலியல் குற்றச்சாட்டை நெய்மர் மறுத்துள்ளார். இது ’செட்டப்’ என்று தெரிவித்துள்ள நெய்மர், தன்னிடம் இருந்து பணம் பறிக்க நடத்தப்படும் நாடகம்தான் இது என்றும் தெரிவித்துள்ளார்.


Advertisement

அதோடு அந்த பெண், நெய்மருக்கு அனுப்பிய அந்தரங்க வீடியோவையும் அவர் அனுப்பிய வாட்ஸ் அப் மெசேஜையும் நெய்மர் வெளியிட்டுள்ளார். அந்த பெண் இன்னும் அனுப்பிய பல அந்தரங்க மெசேஜ்களையும் விரைவில் வெளியிடுவேன் என்றும் நெய்மர் தெரிவித்துள்ளார்.
 

loading...

Advertisement

Advertisement

Advertisement