[X] Close >

பயிற்சியில் விராத் கோலி காயம்!

Virat-Kohli-picks-up-injury-ahead-of-1st-match-against-South-Africa

கிரிக்கெட் பயிற்சியின் போது இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலி காயமடைந்தார்.


Advertisement

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர், இங்கிலாந்தில் நடந்து வருகிறது. கடந்த 30 ஆம் தேதி நடந்த முதல் போட்டியில், இங்கிலாந்து-தென்னாப்பிரிக்க அணிகள் மோதின. இதில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. அடுத்து நடந்த போட்டியில், வெஸ்ட் இண்டீஸ்- பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணி, அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் நேற்று இரண்டு போட்டிகள் நடந்தன. ஒரு போட்டியில் இலங்கை-நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் நியூசிலாந்து அணியும் ஆஸ்திரேலியா- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய மற்றொரு போட்டியில், ஆஸ்திரேலிய அணியும் வெற்றி பெற்றன. இன்று தென்னாப்பிரிக்கா- பங்களாதேஷ் அணிகள் மோத இருக்கின்றன. 


Advertisement

இந்திய அணி, வரும் 5 ஆம் தேதி தென்னாப்பிரிக்க அணியை எதிர்கொள்கிறது. சவுதாம்டனில் நடக்கும் இந்தப் போட்டிக்காக, இந்திய அணி பயிற்சி மேற்கொண்டு வருகிறது. அங்கு நேற்று நடந்த பயிற்சியின் போது விராத் கோலிக்கு கைவிரலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அணியின் பிசியோதெரபிஸ்ட், பேட்ரிக் அவரது கையில், வலியை போக்கும் ஸ்பிரே அடித்தார். பின்னர் அவர் ஒரு டம்ளரில் வைக்கப்பட்ட ஐஸ்கட்டிக்குள் கை விரர்களை வைத்தபடி சென்றார். இந்த காயம் எப்படி ஏற்பட்டது என்ற விவரம் தெரியவில்லை. 

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டி நெருங்கி வரும் நிலையில் விராத் கோலியின் இந்த காயம், ரசிகர்களை கவலை கொள்ள வைத்துள்ளது. இருந்தாலும் அது பெரிய காயம் இல்லை என்று கூறப்படுகிறது. இதுபற்றி இந்திய கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக எதையும் தெரிவிக்கவில்லை. 


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close