“இந்தி மொழியை திணிக்கக் கூடாது” - கமல்ஹாசன்  

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc


மக்கள் மீது எந்த மொழியையும் திணிக்கக்கூடாது என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.


Advertisement

புதிய கல்விக் கொள்கையில் கூறப்பட்டுள்ள மும்மொழிக் கொள்கையின்படி, இந்தி மொழி இல்லாத மாநிலங்களில் இந்தி பாடத்திட்டம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதாவது, புதிய கல்விக் கொள்கையில், மூன்று மொழிக் கொள்கையை கடைபிடிக்க பரிந்துரைக்கப்‌பட்டுள்ளது. அதில், இந்தி மொழி இல்லாத மாநிலங்களில் இந்தி பாடத்திட்டம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 


Advertisement

அதேபோல, இந்தி மொழி பேசும் மாநிலங்களில், இந்தி, ஆங்கிலம் தவிர பிற பகுதிகளில் ஏதேனும் ஒரு மொழியை கூடுதலாக கற்கும்போது வேலைவாய்ப்பை அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்‌ளது.மும்மொழிக் கொள்கை மூலம் கட்டாயப்படுத்தி மொழியை திணிக்கும் விதத்தில் மத்திய அரசு செயல்படுவதாக பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கமல்ஹாசன், 

மக்கள் மீது எந்த மொழியையும் திணிக்கக்கூடாது என்று தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர் நான் இந்தி படத்தில் நடித்தவன். விருப்பமுள்ளவர்கள் எந்த மொழியையும் கற்கலாம். தமிழர்கள் இன்னொரு மொழியை ஏற்பது கடினம். இந்தி திணிப்பு கூடாது என ஏற்கனவே அழுத்தி கூறியுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement