அந்த அடையாளத்தால் என் மனைவிக்கு வருத்தம்: சூரி

parotta-soori

பரோட்டா சூரியாக இருந்த என்னை, புஷ்பா புருஷனாக மாற்றியவர் இயக்குனர் எழில் என்று காமெடி நடிகர் சூரி கூறினார்.


Advertisement

ரெட் ஜெயண்ட் மூவீஸ் தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின், ரெஜினா, சிருஷ்டி டாங்கே, சூரி நடித்துள்ள படம், ‘சரவணன் இருக்க பயமேன்’. எழில் இயக்கியுள்ளார். டி.இமான் இசை அமைத்துள்ளார். வரும் 12ம் தேதி படம் வெளியாகிறது.

படம் பற்றி நடிகர் சூரி கூறும்போது, இதுநாள் வரை பரோட்டா சூரியாக எனக்கு ஓர் அடையாளத்தை கொடுத்திருந்தார் சுசீந்திரன். அதை உடைத்து எனக்கு புஷ்பா புருஷன் என்ற புதிய அடையாளத்தை கொடுத்தவர் சுசீந்திரனின் குரு, எழில். என் மனைவிதான் அந்த அடையாளத்தால் ரொம்ப வருத்தப்படுகிறார். ஷூட்டிங்கில் நடிக்கும் நாங்கள், எவ்வளவு எக்ஸ்ட்ராவா பேசினாலும் அதை அனுமதிப்பார் எழில். அவருக்கு தெரியும், எதை எப்படி உபயோகப்படுத்த வேண்டும் என்று. உதயநிதி சின்சியரான நடிகர், நல்ல மனசுக்காரர். என் அப்பா இறந்தபோது பிரஸ்மீட்டை கூட கேன்சல் செய்து விட்டு, எனக்காக மதுரை வரை வந்து என் அப்பாவுக்கு இறுதி மரியாதை செலுத்தினார். அந்த அளவு, நட்புக்கு மரியாதை கொடுக்கக் கூடியவர்’ என்றார் சூரி.


Advertisement
Related Tags : soorisoori
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement