தற்போது நடைபெற்று வரும் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு 3 அணிகள் கடும் சவாலாக இருக்கும் என்பது கணிக்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் லீக் போட்டிகள் வரும் 30ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. அதற்கு முன்னதாகவே பயிற்சிப் போட்டிகள் கடந்த 24ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. பயிற்சிப் போட்டியில் அனைத்து அணிகளும் தங்கள் பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்களின் திறனை சோதித்து வருகின்றனர். அத்துடன் இங்கிலாந்து மைதானத்தையும் கணிக்க முயற்சித்துள்ளனர்.
சொந்த மண் என்பதால் இங்கிலாந்து கூடுதல் பலத்துடன் உள்ளது. இந்தியாவை பொறுத்தவரை வெற்றி கேப்டன் விராட் கோலி தலைமையில் இந்திய அணி சந்திக்கும் முதல் உலகக் கோப்பை அணி இதுவாகும். இதனால் இந்தத் தொடரை இந்தியா வெல்லும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. ஏனென்றால் விராட் கோலி தலைமையில் தற்போது விளையாடும் இந்திய அணியிடம் அனைத்து சர்வதேச அணிகளும் தோல்வியை சந்தித்துள்ளன.
இருப்பினும் இந்த உலகக் கோப்பை போட்டியில் இந்த அணிக்கு கடும் சவாலாக ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 2க்கு இரண்டு என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றியது. ஆனால் கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்த ஆஸ்திரேலிய அணி 3க்கு இரண்டு என்ற கணக்கில் இந்தியாவிற்கு பதிலடி கொடுத்தது. இரண்டு மாத இடைவெளியில் ஆஸ்திரேலிய அணி தங்கள் ஃபார்மை மீட்டு கொண்டு வந்துவிட்டனர் என கிரிக்கெட் உலகம் வியந்தது. இதைத்தொடர்ந்து 5 போட்டிகள் கொண்ட பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அனைத்து போட்டிகளையும் வென்றது. இதனால் ஆஸ்திரேலியாவின் பலம் மேலும் உயர்ந்தது.
நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்கள் டேவிட் வார்னர் மற்றும் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் இருவரும் நல்ல ஃபாமிற்கு வந்தனர். அவர்கள் இருவரும் இரண்டு வருட தடைக்குப் பின்னர் மீண்டும் ஆஸ்திரேலிய அணியில் சேர்க்கப்பட்டிருப்பது அந்த அணியின் பேட்டிங்கை அசைக்க முடியாத அளவிற்கு மாற்றியுள்ளது. பேட்டிங் மட்டுமின்றி பவுலிங்கில் ஜாசன் பெரெண்ட்ராஃப், பட் கம்மின்ஸ், மிட்ஜெல் ஸ்டார்க், கேன் ரிசர்ட்சன் என ஒரு படையே உள்ளனர். அத்துடன் இங்கிலாந்து மைதானங்கள் ஆஸ்திரேலியாவிற்கு பழக்கப்பட்ட மண் என்பதால், அது மேலும் கூடுதல் பலம் சேர்க்கும்.
ஆஸ்திரேலியாவிற்கு அடுத்தபடியாக இந்தியாவிற்கு சவாலாக இருக்கும் அணி இங்கிலாந்து. இந்த அணியில் அனைத்து பேட்ஸ்மேன்களும் அதிரடியான ஃபாமில் உள்ளனர். ஜாசன் ராய், ஜான்னி பேரிஸ்டோவ், ஜோ ரூட் ஆகியோரது விக்கெட்டை சாய்ப்பது எந்த ஒரு பவுலருக்குமே சாதாரண விஷயம் அல்ல. இவர்களுக்கெல்லாம் மேலாக கேப்டன் ஈயான் மார்கன் மற்றும் கீப்பர் ஜாஸ் பட்லர் உள்ளனர். அவர்களையும் அவுட் செய்தால் ஆல்ரவுண்டர்கள் மொயின் அலி, பென் ஸ்டோக்ஸ் உள்ளனர். இதனால் இங்கிலாந்து அணியிடம் 300 ரன்களுக்கு குறைவாக அடித்த எந்த ஒரு அணிக்கும் வெற்றி என்பது கடினம் தான். கடந்த ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணம் சென்ற இந்திய அணி 2க்கு ஒன்று என்ற கணக்கில் தோல்வியை தழுவியது. ஆனாலும் அந்தத் தொடரில் இந்தியாவின் ‘ராக்கெட் பவுலர்’ பும்ரா விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
இந்தியாவிற்கு இருக்கும் மூன்றாவது சவால் தென்னாப்பிரிக்கா. கடந்த ஆண்டு தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் சென்ற இந்திய அணி 6 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை 5க்கு ஒன்று என்ற கணக்கில் அபாரமாக வென்றது. இருப்பினும் அன்று இருக்கும் தென்னாப்பிரிக்க அணியின் நிலை வேறு, தற்போது உள்ள அணியின் நிலை வேறு. ஏனென்றால் அந்தத் தொடரில் தென்னாப்பிரிக்க அணி கேப்டன் டு பிளசிஸ், கீப்பர் குயிண்டான் டி காக் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டின் ஆகியோர் இல்லை. ஆனால் இவர்கள் மூவருமே இன்று அணியில் உள்ளனர். இவர்களில் டு பிளசிஸ் மற்றும் டி காக் அணியின் பேட்டிங்கிற்கு பெரும் பலமாக உள்ளனர். அத்துடன் எப்பேற்பட்ட பேட்ஸ்மேனை முதல் ஓவரில் வீழ்த்தும் திறன் கொண்டவராக ஸ்டின் இருக்கிறார். எனவே இந்த மூன்று அணிகளையும் வீழ்த்தும் வித்தையை இந்தியா கற்றுக்கொண்டால் மட்டுமே உலகக் கோப்பை எனும் பெருங்கனவு நினைவாகும்..
Loading More post
தமிழகத்தில் ராகுலின் பரப்புரைக்கு தடைகோரி பாஜகவின் எல்.முருகன் கடிதம்
எடப்பாடி தொகுதி வேட்பாளரை தேர்வு செய்ய தனி கவனம் செலுத்தும் திமுக!
“சென்றுவா வெற்றி நமதே! என்று அப்பா சொன்னார்” விஜய பிரபாகரன் விருப்ப மனு தாக்கல்
கேரளாவின் பாஜக முதல்வர் வேட்பாளர் மெட்ரோ மேன் ஸ்ரீதரன் - அதிகாரபூர்வ அறிவிப்பு
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் இரு மாறுபட்ட தீர்ப்பு
நிர்பந்தமா, நிதானமா? - சசிகலா விலகல் எழுப்பும் கேள்விகளும் பின்னணியும்!
புதுச்சேரியில் 9, 10, 11 தேர்வு சாத்தியமா?... குழப்பத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்!
முரண்டு பிடிக்கும் திமுக தலைமை; அதிருப்தியில் கூட்டணி கட்சிகள் - இழுபறியில் பேச்சுவார்த்தை
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை