வாரணாசி சென்றார் பிரதமர் மோடி: உற்சாக வரவேற்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பிரதமர் மோடி தனது தொகுதியான வாரணாசிக்கு இன்று சென்றார். அவருக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.


Advertisement

நடந்து முடிந்துள்ள மக்களவைத் தேர்தலில் வாராணாசி தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் நரேந்திர மோடி, சுமார் 4.80 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கடந்த தேர்தலை விட இந்த முறை அவர் பெற்றது அதிக வாக்கு வித்தியாசம் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, தன்னை தேர்வு செய்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக பிரதமர் மோடி தனி விமானத்தில் இன்று வாரணாசி சென்றார்.


Advertisement

அவரை உத்தரபிரதேச மாநில கவர்னர் ராம் நாயக், உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், பாஜக தேசிய தலைவர் அமித் ஷா ஆகியோர் வரவேற்றனர். பின்னர் அவர் அங்கிருந்து காசி விஸ்வநாதர் ஆலயம் சென்றார். அங்கு சிறப்பு வழிபாடு நடத்துகிறார். அங்கு 11 மணிவரை சிறப்பு தரிசனம் செய்கிறார். ஆயுசு ஹோமம் உட்பட  சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட இருக்கின்றன.

பின்னர் வாராணசியின் முக்கிய பகுதிகளில் சுமார் 5 கி.மீ வரை அவர் ஊர்வலமாகச் சென்று வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறார். பின், பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கூட்டத்தில் பேசுகிறார்.  அங்கு நடக்கும் குடிநீர், போக்குவரத்து பிரச்னைகளை தீர்ப்பதற்காக நடக்கும் நலத்திட்டங்களையும் பார்வையிட இருக்கிறார். பிரதமர் மோடி அங்கு வந்துள்ளதை அடுத்து அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

loading...

Advertisement

Advertisement

Advertisement