“மற்ற தொடர்போல உலகக் கோப்பையில் ஆட முடியாது” - கோலி சூசகம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மற்ற கிரிக்கெட் தொடர்களில் பேட்டிங் செய்வதுபோல எளிதில் உலகக் கோப்பை களத்தில் விளையாட முடியாது என இந்திய கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.


Advertisement

உலகக் கோப்பை போட்டிக்கான அனைத்து அணிகளும் இங்கிலாந்திற்கு சென்றுவிட்டன. தற்போது பயிற்சிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே உலகக் கோப்பையில் பங்கேற்றுள்ள 10 அணிகளின் கேப்டன்களும், உலகக் கோப்பையுடன் போட்டோ கொடுக்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. 


Advertisement

அந்த நிகழ்ச்சியில் கிரிக்கெட் வல்லுநர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து பேசிய விராட், “எங்கள் அணிக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. அதேபோன்று இங்கிலாந்து அணியில் ரசிகர்கள் ஆதரவுடன் பலமாக இருக்கிறார்கள். அத்துடன் உலகக் கோப்பையில் விளையாடும் 10 அணிகளுமே சரிக்கு சமமான பலத்துடன் உள்ளார்கள். இந்தத் தொடரில் அனைத்து அணிகளுமே மற்ற அணிகளுடன் ஒரு போட்டியில் மோத வேண்டும். எனவே அது சவாலான ஒன்றாக இருக்கும். இந்த உலகக் கோப்பையின் தனிச்சிறப்பும் அதுதான். மற்ற தொடர்கள் போல உலகக் கோப்பை இருக்காது. இந்தக் களத்தில் 250 ரன்கள் எடுப்பதே கடினமான ஒன்றாகதான் இருக்கும். 

உலகக் கோப்பையில் நான் சிறப்பாக விளையாடுவேன் எனச் சிலர் கருத்து தெரிவிக்கின்றனர். இங்கு நான் எனக்காக தனிப்பட்ட வகையில் எதுவும் விளையாட முடியாது. எனது திறமை அனைத்து அணியின் பங்களிப்பில் தான் செலுத்துவேன். என்னால் முடிந்த வரை அணிக்காக சிறப்பான பேட்டிங்கை கொடுப்பேன். அனைத்து போட்டிகளிலும் இதுதான் நிலை. இந்தத் தொடரில் ஜோஃப்ரா ஆர்ச்சர் எங்களுக்கு மிகவும் சவாலாக இருப்பார். அவரது பந்துவீச்சை இரண்டு வருடங்களாக கவனித்துள்ளேன். மிகவும் திறமையாக பந்துவீசக்கூடியவர். அதனால் அவரை சாதுர்யமாக இங்கிலாந்து அணி உலகக் கோப்பைக்கு தேர்ந்தெடுத்துவிட்டது. அவரையே அவர்கள் துடுப்புச் சீட்டு போலவும் பயன்படுத்தலாம்” என்றார். 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement