தேர்தலில் பணம் இருந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என நினைத்தவர்களுக்கு மக்கள் பாடம் கற்பித்துள்ள காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி சார்பில் கரூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜோதிமணி, “கரூர் மக்கள் கொடுத்த வெற்றியை சாமானியருக்கான வெற்றியாக கருதுகிறேன். என் மீது ராகுல் காந்தி வைத்த நம்பிக்கையை கரூர் மக்கள் பிரதிபலித்துள்ளனர். எனது வெற்றிக்காக உழைத்த திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினருக்கு நன்றி. களம் மிகக் கடினமாக இருந்தது. 60 நாட்களாக அனைத்து அதிகாரிகளும் தந்த துஷ்பிரயோகத்தையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. கரூர் மக்களின் அன்பையும், பொறுப்பையும் திருப்பிக்கொடுக்க வேண்டும்.
வாக்கு கேட்கச் சென்று எப்படி வெற்றி பெற்றோமோ, அதேபோன்று வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வேண்டும். தேர்தலில் என்னிடம் பணம் இல்லை என்பதால், தான் எளிதில் வெற்றி பெற்றுவிடுவேன் என தம்பிதுரை கூறினார். பணம் இருந்தால் மட்டுமே வெற்றி பெறலாம் என நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு, கரூர் மக்கள் சரியான பாடத்தை கற்பித்துள்ளனர்” என்று தெரிவித்தார். முன்னதாக நேற்று வெளியான தேர்தல் முடிவின் படி, மக்களவைத் துணை சாபாநாயகரை 4.20 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜோதி வென்றுள்ளார்.
Loading More post
பருவம் தாண்டி ஓயாமல் கொட்டிய கனமழை: நீரில் மூழ்கிய பயிர்களால் கண்ணீர் கடலில் விவசாயிகள்!
“அண்ணன்-தம்பி பிரச்னைகள் இருந்தால் பேசி தீர்ப்போம்”- ஓபிஎஸ்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை: நாளை நேரில் ஆஜராகுகிறாரா ரஜினி?
ஜனவரி 21-ல் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: துரைமுருகன் அறிவிப்பு
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஊழியர் மரணம்: காரணம் வேறு என்கிறது உ.பி அரசு
அர்னாப் கோஸ்வாமியின் 'லீக்'கான வாட்ஸ்அப் சாட்... இந்த தேசம் தெரிந்துகொள்ள 'சொல்வது' என்ன?!
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்