JUST IN

Advertisement

மேற்கு வங்கத்தில் 14 இடங்களில் பாஜக முன்னிலை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக 14 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.


Advertisement

மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா முழுவதும் பாஜக அதிகமான இடங்களில் முன்னிலை பெற்றுள்ளன. மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் - பாரதிய ஜனதாவிற்கும் இடையே கடும் போட்டி நிலவியது. மோடி மற்றும் மம்தா பானர்ஜிக்கு இடையில் நடந்த வார்த்தை போர் தேர்தல் பரபரப்பை கூட்டியிருந்தது.


Advertisement

அமித்ஷா பங்கேற்ற தேர்தல் பிரசார பேரணியின் போது இரு கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு கலவரமானது. இதனால், தேர்தல் ஆணையம், தேர்தல் பிரசாரத்தை அம்மாநிலத்தில் ஒரு நாளுக்கு முன்பே முடிக்க உத்தரவிட்டது. இதனால் அம்மாநில மக்களவை தேர்தல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடந்து வருகிறது. இதில் திரிணாமுல் காங் கிரஸ் - பாஜக இடையே முதலில் கடும் போட்டி நிலவியது. 

அங்கு மொத்தமுள்ள 42 தொகுதிகளில் 24 இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. பாஜக 14 இடங்களிலும், காங்கிரஸ் ஒரு இடத்தில் முன்னிலை பெற்றுள்ளது. பாஜக முதன்முறையாக, அங்கு இப்போது அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement