செல்ஃபி எடுத்த போது படகு கவிழ்ந்ததால் நான்கு டாக்டர்கள் பரிதாபமாகப் பலியாயினர்.
மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூரைச் சேர்ந்த டாக்டர்கள் 10 பேர், வார விடுமுறையை ஜாலியாகக் கொண்டாட முடிவு செய்தனர். இதற்காக இந்தாபூர் அருகிலுள்ள உஜ்ஜானே அணைக்கு சென்றனர். அங்கு சில மீன் பிடி படகுகள் இருந்தன. டாக்டர்களுக்கு, அணைக்குள் படகு டிரிப் செல்ல ஆசை வந்தது. இதையடுத்து ஒரு படகுகாரரிடம் பேசினர். அவர் சம்மதம் தெரிவித்தார்.
எந்த வித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் அவர்கள் படகில் ஏறினர். இதைக் கண்ட மற்றொரு படகுகாரர் எச்சரிக்கை செய்தார். ‘நாங்களே டாக்டர்கள், எங்களை பாதுகாக்க எங்களுக்கு தெரியாதா?’ என்று கிண்டலடித்துவிட்டு சென்றனர். படகு அணையின் உள்ளே சென்றுகொண்டிருந்தபோது பத்து டாக்டர்களும் ஓரிடத்தில் ஒன்றாக நின்று செல்ஃபி எடுத்தார்களாம். இதில் படகு திடீரென கவிழ்ந்தது. அனைவரும் தண்ணீருக்குள் விழுந்தனர். இதில், ஆறு டாக்டர்கள் நீந்தி கரைக்கு வந்துவிட, சந்திரகாந்த் உராடே, அன்னாசாகேப் ஷிண்டே, சுபாஷ் மஞ்சரேக்கர், மகேஷ் லாவதே ஆகிய டாக்டர்கள் வந்து சேரவில்லை. போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பிறகு அந்த நான்கு டாக்டர்களும் சடலங்களாக மீட்கப்பட்டனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Loading More post
வேலூர்: அரசு மருத்துவமனையில் 5 நோயாளிகள் உயிரிழப்பு- ஆக்சிஜன் பற்றாக்குறை காரணம் என புகார்
கொரோனா 2-ம் அலை எதிரொலி: பங்குச்சந்தைகளில் தொடரும் வீழ்ச்சி!
ஐபிஎல் 2021: டாஸ் கணக்கை மாற்றி அமைத்த கேப்டன்கள்!
கொரோனா போராளிகளுக்கு ஏப்.24-க்குப் பிறகு புதிய காப்பீட்டு பாலிசி!
இரவு நேர ஊரடங்கால் ஆம்னி பேருந்துகள் முடக்கம் - 2 லட்சம் தொழிலாளர்கள் பாதிப்பு
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு பலன் தருமா? - ஒரு பார்வை
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி