கொடைக்கானலில் திருமணமான பெண்ணை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்து புகைப்படம் எடுத்து மிரட்டிய நபரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் சசி. இவர் ஆனந்தகிரி பகுதியில் மின்சாதன கடை நடத்தி வருகிறார். இந்தச் சூழலில் அதே பகுதியில் கவரிங் நகை கடையில் வேலை பார்த்த வந்த திருமணமான பெண் ரோஜா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது சசி அந்த பெண்ணிடம் பலமுறை தனது சொந்த தேவைக்காக பணத்தை கடனாக பெற்றுள்ளார். ஆனால் சசி அந்த பெண்ணிடம் வாங்கிய பணம் எதுவும் தராத நிலையில், அந்த பெண்ணை வத்தலகுண்டுக்கு வந்து வாங்கிக்கொள்ளுமாறு சசி அழைத்துள்ளார். இதனால் அந்த பெண் சசியிடம் பணத்தை வாங்க வத்தலகுண்டுக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் சசி அந்த பெண்ணை விடுதி ஒன்றிற்கு வரவழைத்து, அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் அதனை புகைப்படம் எடுத்து மிரட்டியுள்ளதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த ரோஜா, தன்னை பலாத்காரம் செய்து, அதனை புகைப்படம் எடுத்து மிரட்டியதாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் சசி மீது வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் பதிக்கப்பட்ட பெண் ரோஜாவிடமும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Loading More post
டெல்லி போராட்டத்தில் விவசாயி ஒருவர் உயிரிழப்பு
டெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள் புகைப்படத் தொகுப்பு
பதற்றத்தில் டெல்லி: செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள்.. போலீசார் குவிப்பு!
கதிகலங்கும் டெல்லி: வன்முறைக்குள் ஒரு மனிதாபிமானம்: வைரல் வீடியோ!
"சட்ட விதிகளை அற்பமாக்கியுள்ளது!" - POCSO குறித்த மும்பை ஐகோர்ட் தீர்ப்புக்கு எதிர்ப்பு
PT Exclusive: "ரிமோட் மூலம் இயங்கும் அரசை தமிழகம் விரும்பாது!" - ராகுல் காந்தி நேர்காணல்
PT Exclusive: "தமிழகத்திடம் ஏராளமானவற்றை கற்றுக்கொள்ள முடியும்!"- ராகுல் காந்தி நேர்காணல்
'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை!'- ஆர்டிஐ சொல்வது என்ன?
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி