“தேனிக்கு செல்லும் 20 வாக்குப்பதிவு எந்திரங்கள்” - ஈவிகேஎஸ் இளங்கோவன் கேள்வி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தேனியில் 2 வாக்குச்சாவடிகளில் மட்டுமே மறுவாக்குப்பதிவு நடக்கும் நிலையில் 20 வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு செல்லப்படுகின்றன. 


Advertisement

வரும் 19 ஆம் தேதி தேனி மாவட்டத்தில் இரண்டு வாக்குசாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து 20 வாக்குப்பதிவு எந்திரங்களும் 30 விவிபாட் எந்திரங்களும் தேனி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றன. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. 

இதுகுறித்து தேனி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறுகையில், “ஏற்கனவே மூன்று நாட்களுக்கு முன்பு கோவையில் இருந்து வாக்குப்பதிவு எந்திரங்களை அனுப்பியுள்ளனர். சதி வேலை செய்வதற்கான ஆயத்தங்கள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. எத்தனை பெட்டிகளை மாற்றினாலும் பன்னீர்செல்வம் மகன் தேனியில் தோல்வியை தழுவுவார். அதில் எவ்வித சந்தேகமும் கிடையாது. 


Advertisement

இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிப்போம். தேர்தல் ஒழுங்காக நடைபெற வேண்டும். தேர்தல் ஒழுங்காக நடந்தால் பன்னீர்செல்வம் மகனுக்கு டெபாசிட்டே கிடைக்காது என்பதால்தான் இதுபோன்ற வேலைகளை ஒபிஎஸ் மோடியோடு பேசி நடத்திகொண்டு இருக்கிறார். கண்டிப்பாக மக்கள் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். 

ஜனநாயக நாட்டில் இதுபோன்ற சர்வாதிகார போக்கு நடக்குமானால் மக்கள் அதை கடுமையாக எதிர்ப்பார்கள். தேனி தொகுதியில் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது” எனத் தெரிவித்தார். 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement