தேசிய அளவில் மூன்றாவது அணி உருவாகுமா என்பது மே 23ஆம் தேதிக்கு பிறகே தெரியவரும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் தலைவரும், தெலங்கானா முதலமைச்சருமான சந்திரசேகர் ராவ் மாநிலக் கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியை முன்னெடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திக்க அவர் நேற்று சென்னை வந்தார். ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்டாலினின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
வீட்டிற்கு வந்த சந்திரசேகர் ராவை, ஸ்டாலின் வரவேற்று அழைத்துச் சென்றார். அப்போது சந்திரசேகர் ராவுக்கு, கருணாநிதியின் சிலையை நினைவுப்பரிசாக ஸ்டாலின் அளித்தார். ஸ்டாலின்- சந்திரசேகர் ராவ் இடையிலான சந்திப்பு ஒரு மணி நேரத்திற்கு மேல் நீடித்தது. அப்போது, திமுக பொருளாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் உடனிருந்தார். சந்திப்புக்குப் பிறகு சந்திரசேகர் ராவ், செய்தியாளர்களை சந்திப்பதை தவிர்த்துச் சென்றுவிட்டார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தேசிய அளவில் மூன்றாவது அணி உருவாகுமா என்பது மே 23-ஆம் தேதிக்கு பிறகே தெரியவரும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், “சந்திரசேகர் ராவ் அணி அமைப்பதற்காக என்னை சந்திக்க வரவில்லை. இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. 3-ஆம் அணிக்கான வாய்ப்பு இருப்பதாக எனக்கு தெரியவில்லை. இருப்பினும் அணி அமையுமா என்பது மே 23-ஆம் தேதிக்கு பிறகே முடிவு செய்யப்படும்” என தெரிவித்தார்.
Loading More post
‘உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டி’ திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு!
டாப் 5 தேர்தல் செய்திகள் : பாஜக வேட்பாளர் உத்தேச பட்டியல்..பாமகவுக்கு மாம்பழ சின்னம்!
கொளத்தூர் இல்லை.. திருவொற்றியூர் தொகுதியில் சீமான் களமிறங்க வாய்ப்பு
முதலிடத்தில் இந்தியா - டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் நியூசிலாந்துடன் மோதல்!
பாமகவுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு : தேர்தல் ஆணையம்
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!