ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த எலிமினேட்டர் சுற்றில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி, தோல்வி அடைந்து வெளியேறியதால் அதன் பயிற்சியாளர் டாம் மூடி கண்ணீர் விட்டு அழுதார்.
12-வது ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. 8 அணிகள் மோதிய இந்த தொடரில் 56 லீக் போட்டிகள் நடத்தப்பட்டன. அதில் டாப் 4 இடங்களுக்கு முன்னேறிய அணிகளுக்கான பிளே ஆப் சுற்றுப் போட்டிகள் நடந்து வருகிறது. மும்பை- சென்னை அணிகளுக்கு இடையிலான முதல் தகுதிச் சுற்றுப் போட்டியில், மும்பை அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு நேரடியாகச் சென்றது. அதில் தோற்ற சென்னை அணிக்கு இன்னொரு வாய்ப்பு இருக்கிறது.
இந்நிலையில் எலிமினேட்டர் சுற்றுப் போட்டி நேற்று நடந்தது. விசாகப் பட்டினத்தில் நடந்த இந்தப் போட்டியில் டெல்லி மற்றும் ஐதராபாத் அணிகள் மோதின. இதில் டெல்லி அணி வெற்றி பெற்றது. தோல்வியடைந்த ஐதராபாத் அணி வெளியேறியது. இதையடுத்து டெல்லி மற்றும் சென்னை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது தகுதிச் சுற்றுப் போட்டி நாளை நடக்கிறது. இந்த போட்டி யில் வெற்றி பெறும் அணி, இறுதிப் போட்டிக்குச் செல்லும். இறுதிப் போட்டியில் மும்பையை எதிர்த்து அந்த அணி மோதும்.
இந்நிலையில், நேற்றைய போட்டியில் டெல்லி அணிக்கு எதிராக, ஐதராபாத் அணி தோல்வி அடைந்ததை, அந்த அணியின் பயிற்சியாளர் டாம் மூடியால் தாங்க முடியவில்லை. இதையடுத்து உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல் அவர் கண்ணீர் விட்டு அழுதார். அவரது அழும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Tom Moody.
Loading More post
பட்ஜெட் 2021: வருமானவரி செலுத்துவோருக்கு ரூ.80,000 வரை சலுகை கிடைக்க வாய்ப்பு!
சீர்காழி: 2 பேரை கொன்று 17 கிலோ நகை கொள்ள...4 மணி நேரத்தில் வளைத்த போலீஸ்... நடந்தது என்ன?
டெல்லி செங்கோட்டையில் ஏற்றப்பட்டது எந்த கொடி?
தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன்?
பட்ஜெட் 2021: வங்கிகளை தனியார்மயமாக்கும் நடவடிக்கையை முடுக்கிவிட திட்டம்?