பல்வேறு பகுதிகளில் வெப்ப அலை வீசும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெப்ப அலை வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


Advertisement

தமிழகத்துக்கு மழையைக் கொடுக்கும் என நினைத்த ஃபோனி புயல் ஏமாற்றியது. அதுமட்டுமல்லாமல் காற்றின் ஈரப்பதம் முழுவதையும் ஈர்த்துச் சென்றதால் கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல பகுதிகளிலும், குறிப்பாக சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமானது. இதன் விளைவாக, பொதுமக்கள் அதிகளவில் சிரமத்திற்கு ஆளாகினர். இந்நிலையில் கத்திரி வெயிலும் தொடங்கியது. ஏற்கெனவே தமிழகம் முழுவதும் வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் கத்திரி வெயிலின் காரணமாக தாக்கம் இன்னும் அதிகமானது.


Advertisement

இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெப்ப அலை வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேநேரம் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலோரப் பகுதிகளில் 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் ஈரப்பதமான காற்று வீசக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. 

சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்சமாக 39 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாக வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

loading...

Advertisement

Advertisement

Advertisement