'வட தமிழகத்தில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு' - முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைப்பெற்றிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், தீவிர காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது இன்று மாலை புயலாக வலுப்பெறக் கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Advertisement

வடதமிழகத்தின் கடற்கரையில் இருந்து சுமார் ஆயிரத்து 340 கிலோமீட்டர் தொலைவில் இந்த தீவிர காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நிலைகொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், இன்றிரவு 100 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்பிருப்பதாகக் கூறியுள்ளது. இன்று மாலை புயலாகவும், நாளை இரவு 11 மணிக்கு மேல் தீவிர புயலாகவும் மாறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 


Advertisement

வரும் 30 ஆம் தேதியன்று மாலையில் வட தமிழக கடற்கரை அருகே நெருங்கக் கூடும் என்றும், இதன் காரணமாக அன்றைய தினமும், மே ஒன்றாம் தேதியும் தமிழகத்தின் வடக்கு கடலோரப் பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

இதற்கிடையே சென்னையில் தலைமைச் செயலாளர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பேரிடர் மேலாண்மை ஆணையர் சத்யகோபால், வருவாய்துறைச் செயலாளர் மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்றனர். புயல் தாக்கும் பட்சத்தில் எடுக்க வேண்டிய முன்னேற்பாடு ந‌டவடிக்கைகள் ‌குறித்து ஆலோசிக்கப்‌பட்டன. இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால், புயலை எதிர்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்தார்


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement