நாடாளுமன்ற தேர்தலுக்கான மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு நிறைவடைந்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் இம்முறை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் மற்றும் இரண்டாம் கட்டத் தேர்தல்கள் ஏற்கனவே நடைபெற்று முடிந்தன. இந்நிலையில் 3-ஆவது கட்டமாக 13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 116 தொகுதிகளில் இன்று வாக்குப் பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. மக்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர்.
மேற்கு வங்கம் உள்ளிட்ட சில பகுதிகளில் வன்முறை நடைபெற்றது. அத்துடன் ஜம்மு காஷ்மீர் பகுதியிலுள்ள அனந்த்நாக் தொகுதியில் வாக்குப்பதிவு மந்தமாகவே நடைபெற்றது. மேலும் மேற்கு வங்கத்தில் நடைபெற்ற வன்முறையில் ஒருவர் பலியானார்.
மாலை 5 மணி நிலவரப்படி மொத்தமாக 61.31 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக மேற்குவங்கத்தில் 78.94% வாக்குகள் பதிவாகியுள்ளன. குறைந்தப் பட்சமாக ஜம்மு-காஷ்மீரில் 12.46% வாக்குகள் பதிவாகியுள்ளன. அதேபோல கர்நாடகாவில் 60.87%, கோவாவில் 70.96%, அசாமில் 74.05%, பீகாரில் 54.95%, சத்தீஸ்கரில் 64.03%, கேரளாவில் 68.62% வாக்குகள் பதிவாகியிருந்தன. உத்தரபிரதேசத்தில் 56.36%, மகாராஸ்டிராவில் 55.05%, ஓடிசாவில் 57.84% வாக்குகளும் பதிவாகின.
முழுமையான வாக்குப் பதிவு நிலவரம் இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும் 65 சதவீதத்திற்கு மேல் வாக்குப் பதிவு ஆகியிருக்கும் என்று கருதப்படுகிறது.
Loading More post
'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்?
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு!
கூட்டணிக் கட்சிகள் கேட்கும் இடங்களை எல்லாம் கொடுத்துவிட முடியாது -ஆர்.எஸ்.பாரதி
ஒதுங்கிய சசிகலா... தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள்?!
வாஷிங்டன் சுந்தர் அரை சதம் - 2ம் நாள் முடிவில் இந்திய அணி 294 ரன்கள் குவிப்பு
'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்?
கேரளாவில் கட்சி மாறும் நிர்வாகிகள்... சமூக நீதியை உறுதிப்படுத்த தவறியதா காங்கிரஸ்?!
ஒதுங்கிய சசிகலா... தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள்?!
அப்பாஸ் சித்திக்: மேற்கு வங்க அரசியலின் புது வரவு... யாருக்கு லாபம்?