மகேந்திர சிங் தோனியை போல் இந்திய கிரிக்கெட் அணிக்கு பங்களிப்பு செலுத்திய வீரர் யாருமில்லை என்று முன்னாள் கேப்டன் கபில் தேவ் கூறியுள்ளார்.
2019ம் ஆண்டு தொடங்கியது முதல் தோனிக்கு சிறப்பான ஆண்டாக அமைந்துள்ளது. ஆஸ்திரேலிய தொடரில் சிறப்பாக விளையாடி தொடர்ந்து மூன்று அரைசதம் அடித்து அசத்தினார். அதன்பிறகும் சிறப்பாக விளையாடி வருகிறார். தற்போது ஐபிஎல் தொடரிலும் சென்னை அணிக்காக மிரட்டி வருகிறார். இருப்பினும், கடந்த ஆண்டு அவருக்கு மிகவும் மோசமான ஆண்டாக அமைந்துவிட்டது. அவர், உலகக் கோப்பை அணியில் இடம்பெறுவது குறித்து மட்டுமல்ல, ஒட்டுமொத்தமாக ஓய்வு பெறுவது குறித்தே விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில், தோனியின் ஆட்டத்திறன் குறித்து அவரை எப்படி நடத்த வேண்டும் என்பது குறித்து முன்னாள் கேப்டன் கபில்தேவ் பேசியுள்ளார். “தோனியைப் பற்றி நான் சொல்ல வேண்டியதில்லை. அவர் இந்திய கிரிக்கெட் அணிக்காக நிறைய பங்களிப்பு செய்திருக்கிறார். அவர் எவ்வளவு காலம் விளையாட விரும்புகிறார் என்பது யாருக்கும் தெரியாது.
அதேபோல்தான், அவரது உடல்தகுதி எவ்வளவு காலம் ஒத்துழைக்கும் என்பதும். ஆனால், தோனியைப் போல் இந்திய அணிக்கு பங்களிப்பு செலுத்தியவர் யாருமில்லை. நாம் அவரை மதிக்க வேண்டும். அதோடு, வாழ்த்தவும் வேண்டும். இந்த உலகக் கோப்பையையும் அவர் வெற்றி பெறுவார் என நம்புகிறேன்” என அவர் தெரிவித்தார்.
அதேபோல் தற்போதையை இந்திய அணி குறித்து கூறுகையில், “தற்போதைய இந்திய அணி சிறப்பாகவே உள்ளது. இருப்பினும், உலகக் கோப்பை அவ்வளவு எளிதாக இருக்காது. ஒரு அணியாக செயல்பட்டு அவர்கள் விளையாட வேண்டும். அவர்களுக்கு தற்போதைக்கு காயம் ஏதுமில்லை என்று நம்புகிறேன்” என்றார்.
ரிஷப் பண்ட்டிற்கு பதிலாக தினேஷ் கார்த்திக்கிற்கு வாய்ப்பு கொடுத்துள்ளது குறித்து, “தேர்வு குழுவினர் தங்களது பணியை செய்துள்ளார்கள். நாம் அதனை மதிக்க வேண்டும். பண்டிற்கு பதிலாக அவர்கள் தினேஷ் கார்த்திக்கை எடுத்துள்ளார்கள். அப்படியெனில் அது சரியாகத்தான் இருக்கும். நாம் தேர்வாளர்களின் சிறந்த பணியை நம்ப வேண்டும்” என்று கபில் தேவ் கூறினார்.
Loading More post
கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி
ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு: காய்கறிக் கடைகள், தியேட்டர்கள் இயங்கத் தடை
தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு!
“தமிழகம் முழுவதும் ஏப்.20 முதல் இரவுநேர ஊரடங்கு அமல்” - தமிழக அரசு
மேக்ஸ்வெல்-டிவில்லியர்ஸ் அதிரடி! கொல்கத்தாவுக்கு 205 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பெங்களூரு!
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி