JUST IN

Advertisement

ரஜினியின் தர்பாரில் இன்று இணைந்தார் நடிகை நயன்தாரா!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் படத்தின் ஷூட்டிங்கில் நடிகை நயன் தாரா இன்று இணைந்தார். அவர் தொடர்ந்து இரண்டு வாரங்கள், இதன் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்.


Advertisement

‘பேட்ட’ படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் ’தர்பார்’ படத்தை, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசை அமைக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இதில் ரஜினி ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.


Advertisement

சந்திரமுகி, குசேலன் படங்களில் ரஜினியுடன் நடித்துள்ள நயன்தாரா, சிவாஜி படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் போஸ்டர் வெளியாகி, சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இந்நிலையில், இதன் ஷூட்டிங் கடந்த 10 ஆம் தேதி மும்பையில் தொடங்கியது.  படம் 2020 பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்தில் போலீஸ், சமூக சேவகர் என இரண்டு வேடங்களில் ரஜினி நடிக்க இருக்கிறார். ரஜினி மகளாக நிவேதா தாமஸும் வில்லனாக இந்தி நடிகர் பிரதிக் பாப்பரும் நடிப்பதாகக் கூறப்படுகிறது.


Advertisement

இந்தப் படத்தில் ஹீரோயின் நயன்தாரா கேரக்டருக்கு முக்கியத்துவம் உள்ளது. அவர் மும்பையில் நடக்கும் படப்பிடிப்பில் இன்று இணைந்தார். தொடர்ச்சியாக இரண்டு வாரம் அங்கு படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார். 


 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement