ராகுல் காந்தியின் குடியுரிமை மற்றும் கல்வித் தகுதி குறித்து பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு நிறைவடைந்துள்ளது. இன்னும், 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்காக அரசியல் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒருவர் மீது ஒவர் விமர்சனங்களையும், கேள்விகளையும் சரமாரியாக முன் வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், பாஜக செய்தி தொடர்பாளர் நரசிம்ம ராவ், ராகுல் காந்தியின் கல்வித் தகுதி மற்றும் இந்திய குடியுரிமை குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், “வேட்பு மனு தொடர்பாக அமேதி தேர்தல் அதிகாரி எழுப்பிய கேள்விகளுக்கு ராகுல் காந்தியும், அவரது வழக்கறிஞர் ராகுல் கவுஷிக்கும் விளக்கம் அளிக்க முடியவில்லை. இது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது.
ராகுல் காந்தி முதலீடு செய்த பேக்கப்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கான 2005 ஆவணங்களின்படி, அவர் பிரிட்டன் குடியுரிமை பெற்றவர் என்பதை தெளிவாக காட்டுகிறது. அவர் பிரிட்டன் குடிமகனாக இருக்கும் பட்சத்தில் தானாகவே இந்திய குடியுரிமையை இழந்துவிடுகிறார்” என்றார்.
கல்வித் தகுதி குறித்து கேள்வி எழுப்புகையில், “2009 மற்றும் 2014ம் ஆண்டுகளில் தாக்கல் செய்த வேட்பு மனுவில் முரண்பட்ட தகவல்கள் இடம்பெற்றுள்ளன. 1994ம் ஆண்டு புளோரிடாவில் உள்ள ரோல்லின்ஸ் கல்லூரியி பி,ஏ முடித்ததாக 2009ம் ஆண்டு தாக்கல் செய்த வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார். அதேபோல், டிரினிடி கல்லூரியில் எம்.பிஃல் டெவலப்மெண்ட் எக்னாமிக்ஸ் (Development Economics) படித்ததாக குறிப்பிட்டுள்ளார். ஆனால், 2014ம் ஆண்டு வேட்பு மனுவில் எம்.பிஃல் டெவலப்மெண்ட் ஸ்டெடிஸ்(Development Studies) முடித்ததாக குறிப்பிட்டுள்ளார்” என்று ராவ் கூறினார்.
Loading More post
டெல்லியில் பிரதமர் மோடியுடன் முதல்வர் பழனிசாமி இன்று சந்திப்பு
தமிழகத்தில் இன்று முதல் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு
"முதல்வர் பழனிசாமி 234 ரன்கள் எடுத்து நாட்-அவுட் பேட்ஸ்மேனாக வருவார்" - ஓ.எஸ்.மணியன்
சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் சாந்தா (93) காலமானார்
நீதிபதிகள் நியமனம் குறித்த பேச்சு: ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?
'மீன் வகைகளில் கவனம் முக்கியம்!' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?