பாஜகவுக்கு 'ரசகுல்லா' தான் கிடைக்கும் : மம்தா விமர்சனம்

Mamata-says-BJP-will-get--rosogolla--in-West-Bengal

மே‌ற்கு வங்கத்தில் நடைபெறும் மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு பெரிய பூஜ்யம் தான் கிடைக்கும் என முதலமைச்சர் மம்தா பானர்ஜி விமர்சனம் செய்துள்ளார்.


Advertisement

மே‌ற்கு வங்க மாநிலம் தக்ஷி‌ன் தினஜ்பூர் மாவட்டத்தில் தே‌ர்தல் பரப்புரையில் ஈடுபட்ட முதலமைச்சர் மம்தா பானர்ஜி, மேற்கு வங்கத்தில் அதிக தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என்கிற பிரதமர் மோடியின் எ‌ண்ணம் பகல் கனவாகவே நீடிக்கும் என்று கூறினார். வரும் தேர்தலில் பா‌ரதிய ஜனதாவுக்கு 'ரசகுல்‌‌லா' தான் கிடைக்கும் என்று வேடிக்கையாகக் ‌குறிப்பிட்டார். அதாவது மேற்கு வங்கத்தின் புகழ்பெற்ற இனிப்பான ரசகுல்லா உருண்டையாக பூஜ்யம் வடிவில் இருப்பதால், அதுதான் மோடிக்கு கிடை‌க்கும் என்ற பொருள்படும்‌படி மம்தா பானர்ஜி பேசினார்.

Related image


Advertisement

மேற்கு ‌வங்க வாக்காளர்களின் கரங்களில் ‌‌இரண்டு லட்டுகள் இருக்கும், ஒன்று மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி, மற்றொன்று மேற்கு வங்கத்தில் பாரதிய ஜ‌னதா ஆட்சி என 2016ல் ‌மோடி பேசியதை மம்தா விமர்சித்தார். பிரதமர் மோடியின் இந்த வாக்குறு‌தி ஒரு போதும் ஈடேறாது என்று மம்தா குறிப்பிட்டார். டெல்லி‌ கொடுத்த லட்‌டுகளை வாங்கி உண்டவர்கள் எல்லாம் அதற்காக வருந்திக் கொண்டிருப்பதாக மம்தா பானர்ஜி கிண்டலடித்தார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement