அரசியலால் பிரிந்த கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் குடும்பம்!

Sister--father-in-Congress--cricketer-Jadeja-backs-BJP

கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் குடும்பம் அரசியலால் பிரிந்துள்ளது.


Advertisement

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா. ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடிவரும் அவர், நேற்று அறிவிக்கப்பட்ட உலகக் கோப்பைப் போட்டிக்கான அணியில் இடம்பிடித்துள்ளார். இந்நிலையில், தான் பாஜகவுக்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்துள்ளார். 


Advertisement

குஜராத் மாநிலம் ஜாம்நகரைச் சேர்ந்தவர் ரவீந்திர ஜடேஜா. அவர் தந்தை அனிருத் சிங். அம்மா லதா கடந்த 2005 ஆம் ஆண்டு விபத்து ஒன்றில் உயிரிழந்துவிட்டார். ஜடேஜாவுக்கு நைனா என்ற சகோதரி இருக்கிறார். நர்ஸ். ஜடேஜா கடந்த 2016 ஆம் ஆண்டு தனது காதலி ரிவபாவை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு நித்யானா என்ற பெண் குழந்தை உள்ளது.

ரிவாபா கடந்த மார்ச் மாதம் பாஜகவில் சேர்ந்தார். அவர் அந்தக் கட்சிக்கு ஆதரவாக இப்போது தேர்தல் பிரசாரம் செய்துவருகிறார். இந்நிலை யில் ஜடேஜாவின் தந்தையும் சகோதரியும் கடந்த ஞாயிற்றுக்கிழமை காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளனர்.  இந்நிலையில், தான் பாஜகவை ஆதரிப்பதாக ட்விட் செய்துள்ள ரவீந்திர ஜடேஜா, அதை பிரதமருக்கும் டேக் செய்துள்ளார். இதன் காரணமாக அவரது குடும்பம் அரசியலால் பிரிந்துள்ளது. 
 


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement