JUST IN

Advertisement

திடீரென்று முடங்கிய ஃபேஸ்புக் - பயனாளர்கள் அவதி 

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஃபேஸ்புக் தளம் இன்று மாலை 4 மணி முதல் செயல்படுவதில் சில தொழில்நுட்ப பிரச்னை ஏற்பட்டுள்ளது.


Advertisement

ஃபேஸ்புக் தளம் எப்போதாவது உலகம் முழுவதும் செயலிழப்பு பிரச்னையை சந்திக்கிறது. அந்தவகையில் இன்று மாலை 4 மணி முதல் ஃபேஸ்புக் தளம் இந்தியாவில் செயல்படுவதில் சில தொழில்நுட்ப பிரச்னை ஏற்பட்டுள்ளது. டவுன் டிடெக்டர்ஸ் என்ற வலைதளம் அமெரிக்கா, மலேசியா மற்றும் துருகி ஆகிய நாடுகளில் ஃபேஸ்புக் செயலிழந்ததால் அதிக பயனாளர்கள் பாதிக்கப்பட்டதாக செய்தி வெளியிட்டுள்ளது. 


Advertisement

அதேபோல ‘த வெர்ஜ்’ என்ற தளத்தின் ஆய்வின்படி பயனாளர்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ் அப் ஆகிய தளங்களை உபயோகப்படுத்துவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது எனத் தெரியவந்துள்ளது. மேலும் இந்தியாவில் ஃபேஸ்புக் தளம் கணினியில் மட்டும் சரியாக செயல்படவில்லை எனத் தெரியவந்துள்ளது. எனினும் ஃபேஸ்புக் செயலியை பயன்படுத்துவதில் எந்தப் பிரச்னையையும் ஏற்படவில்லை. ஏற்கெனவே கடந்த மார்ச் மாதம் ஃபேஸ்புக் இது போன்ற பிரச்னையை சந்தித்தது  குறிப்பிடத்தக்கது. 
 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement