சென்னை அணி முதலில் பந்துவீச்சு - பேட்டிங்கில் மிரட்டுவாரா தினேஷ் கார்த்திக்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.


Advertisement

ஐ.பி.எல் தொடரில் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் சிஎஸ்கே மற்றும் கொல்கத்தை நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில், டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச தேர்வு செய்தது. பனிப் பொழிவின் தாக்கம் இருப்பதால் இரண்டாவது இன்னிங்கில் பந்துவீச சிரமமாக இருக்கும் என்பதால் முதலில் பந்துவீச தீர்மானம் செய்ததாக கூறினார். இரு அணிகளிலும் எவ்வித மாற்றமும் இல்லை.

இந்த இரு அணிகளும் கடைசியாக நடைபெற்ற போட்டியில் அபாரமாக ஆடி வெற்றிப் பெற்றன. சிஎஸ்கே தனது முந்தைய ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வெற்றிக் கொண்டது. இரு அணிகளுமே தலா 4 வெற்றி, 1 தோல்வியுடன் சிறப்பான மற்ற அணிகளுக்கு சிம்மசொப்பனமாக திகழ்கின்றனர். சேப்பாக்கத்தில் இரு அணிகளும் மோதிக் கொண்ட 8 போட்டிகளில் சென்னை அணி 6இல் வெற்றி பெற்றுள்ளது. 


Advertisement

                    

இருஅணிகளும் புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் உள்ளன. கொல்கத்தா அணி ரன் ரேட் அடிப்படையில் முதலிடத்தில் உள்ளது. இந்தப் போட்டியில் சென்னை அணி வெற்றி பெறும் பட்சத்தில் அந்த அணி முதலிடத்திற்கு முன்னேறும். 

loading...

Advertisement

Advertisement

Advertisement