காற்று மாசுபாட்டால் உண்டாகும் நோய்கள் காரணமாக இந்தியாவில் 12 லட்சம் பேர் இறந்துள்ளதாக ஆய்வு ஒன்றில் மூலம் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவை மையமாக கொண்டு செயல்படும் ஹெல்த் எஃபெக்ட்ஸ் இன்ஸ்டியூட் அமைப்பு இந்த ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், “காற்று மாசுபாடு பாதிப்பால் பக்கவாதம், சர்க்கரை, மாரடைப்பு, நுரையீரல் புற்றுநோய், மற்றும் நுரையீரல் நோயால் 2017ம் ஆண்டில் 50 லட்சம் பேர் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியா மற்றும் சீனாவில் இருந்து மட்டும் பாதிக்கு மேல் இறந்துள்ளனர். உலக அளவில் ஏற்படும் காற்று மாசுபாட்டிற்கான மரணங்களுக்கு இந்தியாவும் சீனாவும் சரி பங்கு சம அளவில் பொறுப்பு வகிக்கின்றன. இருநாடுகளிலும் காற்று மாசுபாட்டினால் 12 லட்சம் பேர் 2017இல் இறந்துள்ளனர்.
இந்தியாவில் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு மூன்றாவது முக்கிய காரணமாக காற்று மாசுபாடு உள்ளது. காற்று மாசுபாடு காரணமாக இன்று தெற்கு ஆசியாவில் பிறக்கும் குழந்தையின் வாழ்நாள் ஏறக்குறைய 2 வருடம் 6 மாதங்கள் குறைய நேர்கிறது. உலக அளவில் இது 20 மாதங்களாக உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
அரை சதம் விளாசிய ரோகித் - கடைசி ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்த கோலி!
”தமிழர்களின் துடிப்பான பண்பாடு உலக அளவில் புகழ் பெற்றது” – பிரதமர் மோடி தமிழில் ட்வீட்!
பாலியல் புகார் எதிரொலி : கட்டாய காத்திருப்பு பட்டியலில் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்
60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மார்ச் 1 முதல் தடுப்பூசி!
ஆறு விக்கெட்டுகளை அள்ளிய அக்ஸர் பட்டேல் - இங்கிலாந்து 112 ரன்னில் ஆல் அவுட்!
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?
ஆலிவ் ரிட்லி ஆமைகளைக் காக்கும் சென்னை... எப்படி, எத்தனை முட்டைகள்? - ஒரு பார்வை
ஒரு லிட்டர் பெட்ரோல் அடக்கவிலை ரூ.29.34 மட்டும்தான்... கிறுகிறுக்க வைக்கும் வரிப் பகிர்வு!
கொரோனாவுக்கு இடையே வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்.. உஷார் டிப்ஸ்!