அதிமுக செய்தி தொடர்பாளர் பதவி உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் மார்க்கண்டேயன் நீக்கம் செய்யப்படுவதாக அக்கட்சியின் தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள விளாத்திகுளம் சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 18ம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தொகுதியில் போட்டியிட ஈபிஎஸ் அணி சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ சின்னப்பனும், ஓபிஎஸ் அணியில் முன்னாள் எம்.எல்.ஏ மார்க்கண்டேயனும் அதிமுக தலைமையில் சீட் கேட்டிருந்தனர். இதில் மாவட்ட அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆதரவளாரும் எடப்பாடி அணியை சேர்ந்தவருமான சின்னப்பனுக்கு சீட் ஒதுக்கப்பட்டது.
இதில் அதிருப்தி அடைந்த மார்க்கண்டேயன் கடந்த வாரம் செய்தியாளர்களிடம் பேசிய போது, அதிமுக தலைமையை கடுமையாக விமர்சனம் செய்தார். பின்னர் தான் கட்சியில் வகித்து வந்த தலைமை கழக செய்தி தொடர்பாளர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதைத்தொடர்ந்து தான் சுயேச்சையாக களம் காணபோவதாக அறிவித்து கடந்த சில தினங்களுக்கு முன்பு தேர்தல் பிரச்சாரத்தை விளாத்திகுளத்தில் மார்க்கண்டேயன் துவங்கினார். அதன்படி இன்று எட்டயபுரம் அருகே உள்ள பசுவந்தனை, மீனாட்சிபுரம், எப்போதும் வென்றான் உள்ளிட்ட பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், அமைச்சர் கடம்பூர் ராஜுவின் மிரட்டலால் தனக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கவில்லை எனக் குற்றம் சாட்டினார்.
இந்நிலையில், அதிமுக செய்தி தொடர்பாளர் பதவி உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மார்க்கண்டேயன் நீக்கம் செய்யப்படுவதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதால் நீக்கம் செய்யப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்தலில் மார்க்கண்டேயனுக்கு ஆதரவாக பணியாற்றும் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர்கள் தெய்வேந்திரன், சங்கரப்பாண்டியன் ஆகியோரும் நீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
கொரோனா 2-ம் அலையின் மோசமான பாதிப்பை இந்தியா தடுக்கத் தவறியது எப்படி? - ஒரு பார்வை
மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி - மத்திய அரசு
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி!
தமிழகத்தில் ஒரேநாளில் 10,941 பேருக்கு கொரோனா பாதிப்பு - 44 பேர் உயிரிழப்பு
வேலூர்: அரசு மருத்துவமனையில் 5 நோயாளிகள் உயிரிழப்பு- ஆக்சிஜன் பற்றாக்குறை காரணம் என புகார்