“ஜெயலலிதா இருந்திருந்தால் ஓபிஎஸ் மகனுக்கு சீட் கிடைத்திருக்குமா?” - ஸ்டாலின் 

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் தனது மகன் ரவிந்திரநாத்திற்கு ஓபிஎஸ் சீட் வாங்கியிருக்க முடியுமா என்று தேர்தல் பரப்புரையின் போது மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.


Advertisement

தேனி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனையும், பெரியகு‌ளம் இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சரவணகுமாரையும் ஆதரித்து மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்,‌ திமுக விரும்புகின்றபடி ராகுல்காந்தி பிரதமர் ஆவது உறுதி எனத் தெரிவித்தார். 


Advertisement

இதனைத்தொடர்ந்து தேனி மக்களைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் குமாருக்கு, ஓ.பன்னீர்செல்வம் மகன் என்பதைத் தாண்டி வேறு என்ன தகுதி இருக்கிறது என வினவினார். பின் மறைந்த ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் ஓ.பி.எஸ் மகனுக்கு சீட் கிடைத்திருக்குமா எனக் கேள்வி எழுப்பிய ஸ்டாலின், பாஜக கூட்டணியில் அதிமுக உள்ளது, இதன்மூலம் தமிழகத்தின் உரிமைகளில் எதை மீட்டார்கள் என்றும் கேட்டார்.

Image result for ஜெயலலிதா 

தொடர்ந்து பேசிய மு.க.ஸ்டாலின், விவசாயப் பயிர்க்கடன் மற்று‌ம் மாணவர்களின் கல்வி கடன் ரத்து, நியூட்ரினோ திட்டம் கைவிடப்படும் என்பது உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதியை அளித்தார். மேலும் மறைந்த முதலமைச்சர்‌ ஜெயலலிதா மரணத்தை வைத்து அதிமுகவினர் அரசியல் செய்து வருகின்றனர் என மு.க. ஸ்டாலின் விமர்சனம் செய்தார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement