மோடியை எதிர்த்து வாரணாசியில் அய்யாகண்ணு போட்டி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

வாரணாசி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து தமிழகத்தைச் சேர்ந்த 111 விவசாயிகள் வேட்புமனுத்தாக்கல் செய்யவுள்ளனர்.


Advertisement

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட இருக்கும் பாஜக வேட்பாளர்கள் பட்டியலை டெல்லியில் மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா நேற்று வெளியிட்டார். உத்திரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் மோடியும் குஜராத் மாநிலம் காந்திநகரில் அமித்ஷாவும் போட்டியிடுகின்றனர்.


Advertisement

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து தமிழகத்தைச் சேர்ந்த 111 விவசாயிகள் வேட்புமனுத்தாக்கல் செய்யவுள்ளனர்.

விவசாயத்தையும், விவசாயிகளின் நலனிலும் கவனம் செலுத்தாத பிரதமர் மோடியைக் கண்டித்து, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த அய்யாகண்ணு தலைமையில் விவசாயிகள் 111 பேர் மோடியை எதிர்த்து போட்டியிட வேட்புமனுத்தாக்கல் செய்யவுள்ளனர். 


Advertisement

ஏப்ரல் 19ஆம் தேதி வாரணாசியில் வேட்புமனுத்தாக்கல் தொடங்குவதால், ஏப்ரல் 25ஆம் தேதி மனுத்தாக்கல் செய்ய விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். விவசாயக்கடன்கள் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லியில் 100 நாட்களுக்கு மேலாக போராட்டம் நடத்தியும், மத்திய அரசு நடவடிக்கை எடுக்காததால், பிரதமருக்கு எதிராக போட்டியிட திட்டமிட்டுள்ளதாக அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement