மிகவும் சூடாக டீ குடிப்பதால் உணவுக்குழாய் புற்றுநோய் அல்லது குடல் புற்றுநோய் வருவதற்கான ஆபத்து அதிகம் இருப்பதாக அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
வெயில் காலமோ, குளிர்காலமோ பெரும்பாலனவர்களுக்கு சூடாக டீயோ, காபியோ குடிக்கவில்லை என்றால் வேலையே ஓடாது. இன்னும் சிலருக்கு காலையில் எழுந்தவுடனே டீ குடித்தால்தான் அன்றைய தினமே முழுமை பெறும். அந்த அளவிற்கு தேநீர் மோகம் மக்களிடையே தொற்றிக்கொண்டுள்ளது.
சூடு இல்லாமல் டீ, காபியை குடிப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. இந்நிலையில் மிகவும் சூடாக டீ அல்லது காபி குடித்தால் உணவுக்குழாய் புற்றுநோய் தாக்கும் ஆபாயம் உள்ளதாக அமெரிக்க புற்றுநோய் சங்கம் நடத்திய ஆய்வில் உறுதியாகியுள்ளது. அதாவது 60 டிகிரி செல்சியஸ்க்கு அதிகமான சூட்டில் தேநீர் அருந்துவதால் இந்த பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகம் என மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதேபோல் நாள் ஒன்றுக்கு 700எம்.எல் தேநீரை சூடாக அருந்துவதாலும் 90 சதவீத அளவிற்கு புற்றுநோய் தாக்கும் என்கிறது ஆய்வுகள்.
இந்தியாவில் ஒரு நிமிடத்திற்கு இரண்டு பேர் புற்றுநோய் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். அதாவது ஒரு நாளில் மட்டும் ஏறத்தாழ 1300 பேர் புற்றுநோயால் இறப்பது ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. நமது வாய் முதல் இரைப்பை வரை உள்ள உணவுக்குழாய் மிகவும் மிருதுவானது. அதிகமான சூட்டுடன் டீயோ, காபியோ குடிப்பதால் உணவுக்குழாயின் சுவர் பாதிக்கப்பட்டு திசுக்கள் பலவீனம் அடைகின்றன. இதனால் கேன்சர் கட்டி ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
அமெரிக்க புற்றுநோய் சங்கம் கடந்த 13 ஆண்டுகளாக 40 முதல் 75 வயதுக்குட்பட்ட சுமார் 50 ஆயிரத்து 45 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், சூடாக தேநீரை குடிப்பதால் 317 பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. புகையிலையால் மட்டும் ஒருவருக்கு புற்றுநோய் வருவதில்லை, புத்துணர்வுகாக அருந்தும் தேநீராலும்கூட புற்றுநோய் ஏற்படும் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், சூடு இல்லாத தேநீர் அருந்தினால் இத்தகைய பாதிப்பிலிருந்து தப்பித்துவிடலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
Loading More post
ஏப்ரல் 9ம் தேதி முதல் ஐபிஎல் தொடர் தொடக்கம்?
திருச்சியில் இன்று திமுக பொதுக்கூட்டம்; தொலைநோக்கு திட்டங்களை அறிவிக்கிறார் மு.க.ஸ்டாலின்
நாகர்கோவிலில் இன்று அமித் ஷா பரப்புரை!
தொகுதி பங்கீட்டில் திமுக-காங்கிரஸ் இடையே சுமூக உடன்பாடு; இன்று ஒப்பந்தம் கையெழுத்து!
அனல்பறக்கும் மேற்கு வங்க தேர்தல் களம்.. பிரதமர் மோடி இன்று பிரசாரம்.!
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!