மேலூரில் ரூ.3.6 கோடி மதிப்பு தங்க நகைகள் பறிமுதல்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மதுரை மேலூரில் உரிய ஆவணமின்றிக் கொண்டு செல்லப்பட்ட 3 கோடியே 64 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.


Advertisement

மக்களவை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், நாடுமுழுவதும் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி கும்பகோணத்திலிருந்து மதுரை விமான நிலையத்துக்கு சென்றுக்கொண்டிருந்த லாரியை சோதனையிட்டனர். அதில் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட 3 கோடியே 64 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சுமார் 8 கிலோ தங்க நகைகளை தேர்தல்‌ பறக்கும் படை யினர் பறிமுதல் செய்தனர். 


Advertisement

இதே போல் ‌கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சுங்கசாவடியில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட சுமார் 5.63 கிலோ தங்க நகைகள் தேர்தல் பறக்கும் படையினரால் ‌‌பறிமுதல் செய்யப்பட்டது. இந்த தங்க நகைகள் மதுரையிலிருந்து சேலத்தில் உள்ள நகைக்கடைக்கு கொண்டு சென்றபோது பறிமுதல் செய்யப்பட்டது.


 

loading...

Advertisement

Advertisement

Advertisement