செடிக்கு 25 கிலோ தக்காளி சாகுபடி : இயற்கை விவசாயி அசத்தல்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பெரம்பலூரில் செடிக்கு 25 கிலோ வரை தக்காளி அறுவடை செய்து இயற்கை விவசாயி ஒருவர் வருமானம் ஈட்டிவருகிறார். 


Advertisement

ஐடிஐ முடித்துவிட்டு வெளிநாட்டில் வேலை செய்து திரும்பிய ராமச்சந்திரன் என்பவர், கடந்த ஏழு ஆண்டுகளாக இயற்கை விவசாயம் செய்துவருகிறார். தோட்டக்கலைத்துறை உதவியுடன் காய்கறி விவசாயம் செய்யும் இவர், திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தை வழியாக வெளி மாநிலங்களுக்கும், துபாய், சவூதி நாடுகளுக்கும் காய்கறிகளை ஏற்றுமதி செய்கிறார். 

தற்போது பிகேஎம் 1 ரக தக்காளி சாகுபடி செய்துவரும் இவர், முத‌ல்கட்டமாக 30 கிலோ கொண்ட 30 பெட்டிகளில் அறுவடை முடிந்துள்ளதாக கூறுகிறார். வரும் நாட்களில் ஆயிரம் கிலோ வரை அறுவடையாகும் என்று நம்புகிறார். தக்காளிக்கு இயற்கை பூச்சிவிரட்டியை பயன்படுத்துவதாக கூறும் ராமச்சந்திரன், வடமாநிலங்களில் உள்ள இந்திய ராணுவ முகாம்களுக்கு தக்காளிகளை அனுப்பி வைப்பதாக தெரிவித்துள்ளார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement