நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலி எஸ்ஐ கைது செய்யப்பட்டார்.
ஊட்டியை சேர்ந்த செரிப் என்பவருடைய வளர்ப்பு மகன் அப்பாஸ். வயது 33. இவர் அம்பாசமுத்திரத்தை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து, அடைவி யார் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இதனிடையே நேற்று அம்பாசமுத்திரம் ரயில் நிலையம் வழிப்பாதையில் சென்ற இசக்கி பாண்டியன் என்பவரின் லாரியை வழிமறித்த அப்பாஸ், தான் எஸ்ஐ எனக் கூறிக்கொண்டு வசூல் வேட்டை செய்துள்ளார். ஆனால் அப்பாஸ் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த இசக்கி பாண்டியன் அம்பாசமுத்திரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கவே உடனடியாக அங்கு வந்த போலீசார் அப்பாஸை அழைத்து விசாரணை செய்தனர்.
இதில் கடந்த 2012-ஆம் ஆண்டு முதலே போலி ஐடி கார்டை தயாரித்து, தான் ஒரு எஸ்.ஐ என்று கூறிக்கொண்டு நிறைய இடங்களில் வசூல் வேட்டையில் அப்பாஸ் இறங்கியது தெரியவந்தது. மேலும் இவருடைய உறவினர் ஒருவர் காவலராக இருப்பதாகவும் அவருடைய உடையை அவருக்கு தெரியாமல் எடுத்து ஆரம்பகட்டத்தில் ஊட்டி, நீலகிரி போன்ற இடங்களில் கைவரிசை காட்டியதாகவும் கூறப்படுகிறது. தற்போது அப்பாஸ் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Loading More post
தமிழகத்தில் 8,000ஐ நெருங்கியது ஒருநாள் கொரோனா பதிப்பு!
டெல்லி கேபிடல்ஸ் வீரர் நார்ட்ஜேவுக்கு கொரோனா தொற்று!
ஹரித்வார் கும்பமேளா விழாவில் 48 மணி நேரத்தில் 1000 பேருக்கு கொரோனா!
‘1258 நாட்களாக தக்க வைத்திருந்த முதலிடம்’ - விராட் கோலியை பின்னுக்கு தள்ளினார் பாபர் அசாம்
சித்திரை முதல்நாள் தமிழ்ப் புத்தாண்டாக எப்போதிலிருந்து கொண்டாடப்படுகிறது?