விஜய்சங்கர் அசத்தல் பந்துவீச்சு - இறுதி ஓவரில் இந்திய அணி த்ரில் வெற்றி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


Advertisement

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாக்பூர் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 48.2 ஓவரில் 250 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கேப்டன் விராட் கோலி (116) சதம் விளாசினார். சிறப்பாக விளையாடிய விஜய் சங்கர் 46 ரன்கள் எடுத்தார். ரோகித் சர்மா, தோனி டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தனர். மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

     


Advertisement

இதனையடுத்து, 251 ரன்கள் என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி விளையாடியது. முதல் விக்கெட்டுக்கு பின்ச், கவாஜா ஜோடி 83 ரன்கள் எடுத்து, வலுவான அடித்தளத்தை அமைத்தது. பின்ச் 37, கவாஜா 38 என அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். பின்னர் வந்த மார்ஷ் 16, மேக்ஸ்வெல் 4 ரன்னில் நடையை கட்டினர். இதனால், இந்திய அணி எளிதில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஹேண்ட்ஸ்ஹோம், ஸ்டோய்னிஸ் ஜோடி நிலைத்து விளையாடி ரன்களை குவித்தது. 

ஹேண்ட்ஸ்ஹோமை அசத்தலாக ரன் அவுட் செய்து ஜடேஜா ஆட்டமிழக்க செய்தார். ஸ்டோய்னிஸ் நிலைத்து விளையாட மற்றவர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இருப்பினும், கடைசி ஓவரில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற 11 ரன்கள் தேவைப்பட்டது. பும்ரா, சமி இருவரும் தலா 10 ஓவர்கள் வீசிவிட்டனர். அதனால், விஜய்சங்கர் கடைசி ஓவரினை வீசினார். 

       


Advertisement

முதல் பந்திலேயே அரைசதம் அடித்து விளையாடி வந்த ஸ்டோய்னிஸை எல்.பி.டபிள்யூ செய்து அவுட் ஆக்கினார். இரண்டாவது பந்தில் இரண்டு ரன்கள் எடுக்கப்பட்டது. மூன்றாவது பந்தில் ஜம்பாவை அவர் கிளீன் போல்ட் ஆக்கினார். இந்திய அணி கடைசி ஓவரில் 8 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

     

இந்திய அணி தரப்பில் குல்தீப் 3 விக்கெட் சாய்த்தார். பும்ரா 2 விக்கெட் எடுத்தார். 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. மேலும், இந்திய அணி தனது 500வது வெற்றியை பதிவு செய்துள்ளது. 

     

loading...

Advertisement

Advertisement

Advertisement