தமிழ்நாட்டிலுள்ள 7 இடங்களில் இன்று 100 டிகிரியை தாண்டி வெயில் பதிவாகியுள்ளது.
கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் மழை பொய்த்துப்போனது. வழக்கமாக பெய்யும் மழையை விட, மிகக் குறைந்த அளவே மழை பெய்தது. குறிப்பாக சென்னையில் ஓரிரு நாட்கள் மட்டுமே மழை பெய்தது. இதனால் தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. சென்னையில் குடிநீர் திண்டாட்டம் இப்போதே தொடங்கிவிட்டது என்றே கூறலாம். ஆனால் அதனை சரிசெய்யும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இந்தச் சூழலில் காற்றின் ஈரப்பதம் குறைந்துள்ளதாகவும் மேக மூட்டங்கள் காணப்படாததால் குமரி முதல் வட கர்நாடகம் வரை உள்ள பல மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்க துவங்கியுள்ளதாக சென்னை வானிலை மையம் கடந்த சில தினங்களுக்கு முன் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் ஏழு இடங்களில் இன்று வெயிலின் தாக்கம் 100 டிகிரிய தாண்டியுள்ளது. அதன்படி இன்று அதிகபட்சமாக திருத்தணியில் 104 டிகிரியாக வெயில் பதிவாகியுள்ளது. அத்துடன் சேலத்தில் 103 டிகிரியாகவும், வேலூர் மற்றும் மதுரையில் 102.5 டிகிரியாகவும், கரூரில் உள்ள பரமத்தியில் 102 டிகிரியாகவும், தருமபுரி மற்றும் திருச்சியில் 101 டிகிரியாகவும் வெயில் பதிவாகியுள்ளது. இனிவரும் நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும் ஏதிர்பார்க்கப்படுகிறது.
Loading More post
தேவேந்திரகுல வேளாளர் மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!
கொரோனா பரவலை குறைக்க 10 முக்கிய வழிகள்: மருத்துவர் பிரதீப் கவுர் வழிகாட்டுதல்
மகாராஷ்டிராவில் அடுத்த 15 நாட்களுக்கு ஊரடங்கு: முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவிப்பு
வேளச்சேரி வாக்குச்சாவடி எண் 92-இல் ஏப்.,17ம் தேதி மறுவாக்குப்பதிவு
ஈ.வெ.ரா. சாலை பெயர் பலகை சர்ச்சை: விளக்கமளித்த நெடுஞ்சாலைத்துறை மண்டலப் பொறியாளர்
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன? - ஒரு பார்வை
கும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்?
2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன?
கோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா? இவற்றையெல்லாம் கவனியுங்கள்!