வரும் மே மாதம் 31ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை வெளியிடப்படும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சிகளுக்கான தேர்தல் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெறாமல் உள்ளது. இதனால் உள்ளாட்சித் துறைகளின் பணிகள் முடங்கியிருப்பதாக பல குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு வருகின்றன. இதனால் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் அந்த உத்தரவை அரசு நிறைவேற்றவில்லை என, திமுக சார்பில் நீதிமன்ற அவமதிப்பு தொடரப்பட்டது. இந்த வழக்கில் பல கட்ட விசாரணைகள் நடத்தப்பட்டன.
இதற்கிடையே உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என தமிழக வழக்கறிஞர் ஜெகதீஷன் தொடர்ந்த வழக்கு நேற்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, உள்ளாட்சித் தேர்தலுக்கு அறிவிப்பு மே மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என தமிழக மாநில தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று திமுக உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. இதிலும், வரும் மே மாதம் 31ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை வெளியிடப்படும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம் வழக்கை, ஜூன் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
Loading More post
கொரோனா 2-ம் அலையின் மோசமான பாதிப்பை இந்தியா தடுக்கத் தவறியது எப்படி? - ஒரு பார்வை
மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி - மத்திய அரசு
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி!
தமிழகத்தில் ஒரேநாளில் 10,941 பேருக்கு கொரோனா பாதிப்பு - 44 பேர் உயிரிழப்பு
வேலூர்: அரசு மருத்துவமனையில் 5 நோயாளிகள் உயிரிழப்பு- ஆக்சிஜன் பற்றாக்குறை காரணம் என புகார்