கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே பாம்பு கடித்த முதியவர் ஒருவர், தன்னை கடித்த பாம்புடன் அரசு மருத்துவமனைக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள சின்னகண்டியன்குப்பத்தை சேர்ந்தவர் விவசாயி ரங்கநாதன்.இவர் வழக்கம் போல அவரது விளைநிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது, திடீரென இரண்டடி நீளமுள்ள நல்ல பாம்பு ஒன்று அவரது காலில் கடித்துள்ளது. பாம்பிடம் கடிபட்டபோதிலும் அஞ்சாத முதியவர் ரங்கநாதன், அதனை நெகிழிப் பையில் போட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக எடுத்து வந்துள்ளார்.
இந்நிலையில் வழக்கம் போல சிகிச்சை பெறுவதற்காக ஏராளமான நோயாளிகள் அரசு மருத்துவமனையின் காத்திருந்தனர். அப்போது நெகிழிப் பையில் இரண்டடி நீளமுள்ள நல்ல பாம்பு உயிருடன் நெளிந்து கொண்டிருந்ததை கண்ட மருத்துவமனை ஊழியர்களும், நோயாளிகளும் அலறியடித்தபடி அங்கிருந்து ஓடியதால், மருத்துவமனையில் பதற்றம் ஏற்பட்டது.
அதன்பின்னர் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் மருத்துவர்கள் பாம்பின் விஷத்தன்மையை அறிந்த பின்,அதற்கேற்ப மருத்துவர்கள் ரங்கநாதனுக்கு சிகிச்சை அளித்தனர். இதனைதொடர்ந்து அந்த நல்ல பாம்பை அருகில் உள்ள வனப்பகுதிக்குள் விடப்பட்டது. இரண்டடி நீள நல்ல பாம்புடன் விவசாயி ரங்கநாதன் மருத்துவமனைக்கு வந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் ரங்கநாதன் தொடர் சிகிச்சை பெற்று தற்போது நலமுடன் உள்ளார்.
Loading More post
‘உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டி’ திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு!
டாப் 5 தேர்தல் செய்திகள் : பாஜக வேட்பாளர் உத்தேச பட்டியல்..பாமகவுக்கு மாம்பழ சின்னம்!
கொளத்தூர் இல்லை.. திருவொற்றியூர் தொகுதியில் சீமான் களமிறங்க வாய்ப்பு
முதலிடத்தில் இந்தியா - டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் நியூசிலாந்துடன் மோதல்!
பாமகவுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு : தேர்தல் ஆணையம்
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!