20 நாட்களில் திருமணம்! - வைரலாகும் ஆர்யா சாயிஷா புகைப்படங்கள்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நடிகர் ஆர்யா - சாயிஷா வெளிநாட்டில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Advertisement

நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவில் பல நடிகைகளுடன் சேர்த்து கிசுகிசுக்கப்பட்டவர். அப்படித்தான் நடிகை சாயிஷாவும், ஆர்யாவும் காதலித்து வருவதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின.


Advertisement

இருவரும் விரைவில் திருமணம் செய்யப்போகிறார்கள் என்றும் தகவல் பரவியது. ஆனால் அவர்கள் இருவரும் இந்த செய்தியை உறுதி செய்யவும் இல்லை. மறுக்கவும் இல்லை.

இதைத்தொடர்ந்து காதலர் தினமான பிப்ரவரி 14 ஆம் தேதி நடிகர் ஆர்யா தனது திருமணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினரின் ஆசியுடன் தானும், சாயிஷாவும் அடுத்த மாதம் திருமணம் செய்ய இருப்பதாக நடிகர் ஆர்யா தெரிவித்திருந்தார். 


Advertisement

பிரபல இந்தி நட்சத்திரங்கள் திலிப் குமார்-சாயிரா பானு தம்பதியின் பேத்திதான் சாயிஷா. ‘கஜினிகாந்த்’ படத்தில் ஆர்யாவுடன் நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. தற்போது இருவரும் சூர்யா நடிக்கும் காப்பான் படத்தில் நடித்து வருகின்றனர். 

இந்நிலையில் நடிகர் ஆர்யா - சாயிஷா வெளிநாட்டில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

loading...

Advertisement

Advertisement

Advertisement