நாம் அனைவரும் அதிகமாக கற்கின்றோம். ஆனால் குறைவாகத்தான் செயல்படுகிறோம் என முதலமைச்சர் பழனிசாமி பேசினார்.
சென்னை மாநிலக் கல்லூரியின் 175-ஆம் ஆண்டு விழா இன்று கொண்டாடப்பட்டது. இதில் பங்கேற்று பேசிய முதலமைச்சர் பழனிசாமி, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தென்னிந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் கல்லூரி என்ற பெருமை மாநிலக் கல்லூரிக்கு உண்டு என்றார். சென்னை பல்கலைக்கழகம் தொடங்குவதற்கு முன்பே தொடங்கப்பட்ட முதல் அரசு கல்லூரி. இக்கல்லூரியில் உள்ள ஒவ்வொரு வகுப்பறையும் எத்தனையோ மேதைகளை உருவாக்கியுள்ளன. இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு பெற்ற சர்சிவி ராமன். சிந்தனை சிற்பி சிங்காரவேலன் உள்ளிட்ட ஏராளமான சாதனையாளர்களையும், ஐஏஸ், ஐபிஎஸ், அதிகாரிகளையும் உருவாக்கியது மாநிலக் கல்லூரிதான் என புகழாரம் சூட்டினார்.
ஒரு நாட்டின் எதிர்காலம் வகுப்பறையின்தான் உருவாக்கப்படுகிறது என்பார்கள். ஏட்டுக்கல்வி மட்டும் ஒருவருடைய எதிர்காலத்தை நிர்ணயித்து விடாது. சமுதாயக் கல்விதான் அவரை முழு மனிதனாக உருவாக்குகின்றது. நாம் அதிகமாக கற்கின்றோம். ஆனால் குறைவாகத்தான் செயல்கின்றோம். இந்த நிலைமை மாற வேண்டும் என்றும் பழனிசாமி தெரிவித்தார். கல்வி என்பது தேர்வுக்காக மட்டும் இருக்க கூடாது. வாழ்க்கைக்கு வழிகாட்டியாகவும் இருக்க வேண்டும் என்றும் பழனிசாமி பேசினார்.
Loading More post
சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி: போராட்டக்களத்தில் தொடரும் வகுப்புகள்!
"எங்கள் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடாதீர்கள்" - அமெரிக்காவுக்கு ரஷ்யா எச்சரிக்கை
PTExclusive: ''களத்தில் இருப்பது அதிமுகவும், திமுகவும் தான்''- முதல்வர் பழனிசாமி நேர்காணல்
ஜெயலலிதா, கலைஞர் இல்லாமல் நடக்கும் தேர்தல்; எல்லாக் கட்சிக்கும் புதுத் தேர்தல் - பிரேமலதா
ஜெயலலிதா நினைவு இல்லம் ஜன.28ல் திறப்பு - தமிழக அரசு
PTExclusive: ''களத்தில் இருப்பது அதிமுகவும், திமுகவும் தான்''- முதல்வர் பழனிசாமி நேர்காணல்
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!
9 கிமீ நீளம்; 40 மாடி கட்டிடம் கட்டுமளவு வானளாவிய உயரம்; சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்
பூமி, சூரரைப் போற்று, சில புரிதல்கள்.. 'கார்ப்பரேட்' கழுவியூற்றப்படுவது எந்த அளவுக்கு சரி?