டி20 கிரிக்கெட் சர்வதேச தரவரிசையில் சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் புதிய உச்சத்தை எட்டியுள்ளார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி 1-2 என்ற கணக்கில் தோற்றது. நேற்று ஹாமில்டனில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், இந்திய அணி கடைசி வரை போராடி தோல்வி அடைந்தது. இந்தப் போட்டியில் குல்தீப் யாதவ் மட்டும் சிறப்பாக பந்துவீசி 2 விக்கெட் சாய்த்தார்.
இந்நிலையில், ஐசிசி தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. 728 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் 793 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். பாகிஸ்தான் வீரர்கள் ஷதாப் கான்(720), இமாத் வாசிம்(705) மூன்றாவது, நான்காவது இடத்தில் உள்ளனர்.
இந்திய அணியில் சாஹல் 17, புவனேஸ்வர்குமார் 18வது இடங்களில் உள்ளனர். இந்தத் தொடரில் சரியாக விளையாடாததால் சாஹல் 6 புள்ளிகள் குறைந்துள்ளார். குர்ணால் பாண்ட்யா 39 இடங்கள் முன்னேறி 58வது இடத்தை பிடித்துள்ளார்.
டி20 பேட்டிங் தரவரிசையை பொறுத்தவரை பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் 885 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். இந்திய அணி தரப்பில் முதல் பேரில் ரோகித் சர்மா, கே.எல்.ராகுல் மட்டும் இடம் பிடித்துள்ளனர். ரோகித் 698 புள்ளிகளுடன் 7வது இடத்திலும், ராகுல் 677 புள்ளிகளுடன் 10வது இடத்திலும் உள்ளனர்.
Loading More post
இரவுநேர ஊரடங்கு: தென் மாவட்டங்களுக்கு பகலில் கூடுதல் அரசு பேருந்துகள் இயக்க திட்டம்!
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது மாநில அரசுகளின் பொறுப்பு - பியூஷ் கோயல்
பகலில் கூடுதல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும்- ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம்
ரயில்களில் திரவ ஆக்சிஜனை கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் தீவிரம்!
6 மாநிலங்களில் இருந்து மகாராஷ்டிரா செல்ல புதிய கட்டுப்பாடு!
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி