விவசாயிகளுக்கு பிணை இல்லாமல் வங்கிகள் வழங்கும் கடன் வரம்பு ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
மும்பையில் நடைபெற்ற ரிசர்வ் வங்கியின் கூட்டத்தில் விவசாயிகளுக்கு பிணை இல்லாமல் வங்கிகள் வழங்கும் கடன் வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு லட்சம் ரூபாய் வரையிலான விவசாயக் கடனை பிணை இல்லாமல் வழங்கலாம் எனக் கடந்த 2010ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த வரம்பு 60 ஆயிரம் ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
விலைவாசி நிலவரம் மற்றும் முதலீட்டு பொருட்கள் விலையை கருத்தில் கொண்டு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, விவசாயக் கடன் நடைமுறைகளில் மாற்றம் கொண்டு வருவது தொடர்பாக ஆராய, குழு அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி (ரெப்போ) தற்போதைய 6.50 சதவீதத்திலிருந்து 6.25 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. அதாவது 0.25 சதவீதம் வட்டி குறைக்கப்பட்டுள்ளது. ஒன்றரை வருடங்களுக்கு பிறகு ரெப்போ வட்டியை ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது.
மும்பையில் நடைபெற்ற நிதிக்கொள்கை ஆய்வுக் கூட்டத்தில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சக்திகாந்ததாஸ் பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் கூட்டம் இதுவாகும். ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் வீடு, வாகனங்களுக்கான வட்டி விகிதங்கள் குறைய வாய்ப்பு உள்ளது.
Loading More post
முத்தூட் பைனான்ஸ் கொள்ளை: சினிமாவை மிஞ்சும் சிசிடிவி காட்சிகள்
கங்காரு பொம்மை வடிவில் உருவாக்கப்பட்டிருந்த கேக்கை வெட்ட மறுத்த ரஹானே!
காஞ்சிபுரம்: சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை விபத்துகளும் மரணங்களும்
ஓப்பனிங்.. அதிரடி.. பழைய உத்தப்பாவை மீண்டும் உசுப்ப கணக்கு போடும் சிஎஸ்கே?!
தொடர் சிகிச்சையில் சசிகலா... முழு விவரம் தருகிறதா இந்த மூன்று நாள் ஹெல்த் அப்டேட்ஸ்?
அமெரிக்க அதிபர் பைடனின் தொடக்க உரையை செதுக்கிய இந்தியர்... யார் இந்த வினய் ரெட்டி?!
வதந்திகளை நம்பாதீர்.. தடுப்பூசி செலுத்திக் கொண்ட மருத்துவரின் அனுபவப் பகிர்வு
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’