காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவி கைது 

Jamshedpur-woman--boyfriend-kill-her-husband--keep-body-in-fridge-before-dumping-it

ஜம்ஷெத்பூரில் காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்துவிட்டு காணமால் போனதாக நாடகமாடிய மனைவியை போலீசார் கைது செய்தனர்.


Advertisement

ஜார்கண்ட், ஜம்ஷெத்பூரை சேர்ந்தவர் தபான் தாஸ். இவரது மனைவி சுவேதா தாஸ். இவர்களுக்கு எட்டு வயதில் மகள் உள்ளார். இந்நிலையில், சுவேதா தாஸ் கடந்த 15 ஆம் தேதி தன் கணவரை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து தீவிர விசாரணையில் இறங்கிய போலீசார் பரபங்கி பகுதியில் சடலம் ஒன்றை கண்டெடுத்தனர். அது காணாமல் போன தபான் தாஸ் என்பது விசாரணையில் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்தது மனைவி சுவேதா தாஸ்தான் என்பது தெரியவந்தது. இதையடுத்து சுவேதா தாஸ், காதலன் சுமித் சிங், அவரது நண்பர் சோனு லால் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.


Advertisement

இதுகுறித்து போலீசார் கூறுகையில், “தபான் சிங் குடிப்பழக்கம் உள்ளவர். இதனால் அவருக்கும் அவரது மனைவி சுவேதா தாஸுக்கும் இடையே அடிக்கடி சண்டை வருவதாக கூறப்படுகிறது. இதனிடையே சுவேதா தாஸுக்கும் சுமித் சிங்கிற்கும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு முகநூலில் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியுள்ளது. 

ஜனவரி 12 ஆம் தேதி இரவு தபான் தாஸ் குடித்துவிட்டு வந்து சுவேதா தாஸுடம் சண்டை போட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுவேதா தாஸ், சுமித் சிங்கிற்கு அழைப்பு விடுத்துள்ளார். நண்பர் சோனு லாலுடன் வந்த சுமித் சிங், சுவேதா தாஸுடன் சேர்ந்து தபான் தாஸை கொலை செய்துள்ளனர். 


Advertisement

பின்னர், குளிர்சாதனப்பெட்டியில் வைத்து அடுத்த நாள் காலை அதாவது ஜனவரி 13 ஆம் தேதி அப்புறப்படுத்தி பரபங்கி பகுதியில் உள்ள புதரில் தள்ளியுள்ளனர். இதை விசாரணையில் மூன்று பேரும் ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்துள்ளனர்.” எனத் தெரிவித்தனர்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement