பரிசு மழையில் இந்திய கிரிக்கெட் அணி: பிசிசிஐ அறிவித்த ஜாக்பாட்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஆஸ்திரேலியவில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் தொடரை வென்று வரலாற்று சாதனை ‌படைத்த இந்திய அணிக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் பரிசுத் தொகை அறிவித்துள்ளது. 


Advertisement

2019ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணிக்கு சாதகமான ஆண்டாக தொடங்கியது. ஆஸ்திரேலியவில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் தொடரை வென்று சாதனை படைத்தது விராட் கோலி தலைமையிலான இந்திய அணி. கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை ஒருமுறை கூட இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றதில்லை என்பதே வரலாறாக இருந்தது. சுமார் 71 ஆண்டுகள் வரலாற்றில் முதல்முறையாக ஆஸ்திரேலியாவை, அதன் சொந்த மண்ணில் இந்தியா வீழ்த்தி வரலாற்றை மாற்றி எழுதியது இந்திய அணி. 


Advertisement

ஆஸ்திரேலியாவை சொந்த மண்ணில் வீழ்த்திய கேப்டன் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார். அவரின் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல் என்றுகூட சொல்லலாம். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வெற்றியை அடுத்த நொடி முதலே இந்திய கிரிக்கெட் வீரர்களும், இந்திய ரசிகர்களும் கொண்டாடத் தொடங்கினர். 

இந்நிலையில் ஆஸ்திரேலியவில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் தொடரை வென்று வரலாற்று சாதனை ‌படைத்த இந்திய அணிக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் பரிசுத் தொகை அறிவித்துள்ளது. அதன்படி அணியின் லெவனில் இடம்பெற்ற வீரர்களுக்கு ஒவ்வொரு போட்டிக்கும் தலா 15 லட்சம் அளிக்கப்படும் என தெரிவித்துள்ளது.


Advertisement

லெவனில் இடம் பெறாத, அதேநேரம் அணியில் இடம்பெற்ற வீரர்களுக்கு ஒவ்வொரு போட்டிக்கும் 7.5 லட்சம் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும், பயிற்சியாளர்களுக்கு தலா 25 லட்சம் அளிக்கப்படும் என வாரியம் தெரிவித்துள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement