’நடக்கலாம், நடக்காமலும் போகலாம் என்பதை கணித்தே சொன்னேன்’: தமிழிசை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

திருவாரூரில் இடைத்தேர்தல் நடக்கலாம் நடக்காமலும் போகலாம் என தெரிவித்தது, எனது அரசியல் ரீதியான கணிப்புதான் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.


Advertisement

திருவாரூர் தொகுதிக்கு வரும் 28ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்கும் என கடந்த 31ஆம் தேதி, தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்த தேர்தல் ரத்து செய்யப்படுவதாகவும், தேர்தல் தொடர்பாக இதுவரை நடைபெற்ற பணிகள் அனைத்தும் செல்லாது என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தேர்தல் தொடர்பாக நேற்று முன் தினம் கருத்துத் தெரிவித்த, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், ‘’இடைத்தேர்தல் நடக்கலாம் நடக்காமலும் போகலாம்’’ என்று கூறியிருந்தார். இந்நிலையில் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.


Advertisement

இதுபற்றி அவரிடம் கேட்டபோது, ‘’இடைத்தேர்தலை ரத்து செய்தது சரியான நடவடிக்கை. இந்த நேரத்தில், நிவாரணப் பொருட்கள் கொடுப்பது தான் சரியாக இருக்கும். தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு, அந்தப் பகுதிக்கு மட்டும் எந்த திட்டமாக இருந்தாலும் நிறுத்தி வைக்கப்படும் நிலை ஏற்படும். இந்தச் சூழலில் தேர்தல் சரியாக நடக்க வாய்ப்பில்லை. அது சரியாகவும்  இருக்காது. அதோடு, மக்கள் அங்கு பரிதவித்துக்கொண் டிருக்கும்போது, அங்கே தேர்தலை விட, அவர்களுக்கு தேறுதல்தான் -அதாவது அவர்களைத் தேற்றி, புயலின் தாக்கத்தில் இருந்து மீட்டெடுப் பது தான் இந்த நேரத்தில் சரியாக இருக்கும்., ஓட்டெடுப்பு நடத்துவதை விட சரியாக இருக்கும்.


Advertisement

அதனால் தேர்தல் ரத்து சரியான முடிவு. இந்த நேரத்தில் தேர்தல் ஆணையம் ஏன் தேர்தலை அறிவித்தது என்று தெரியவில்லை. இப்போது அவர்களுக்கு நிவாரணம் தேவை. இந்த ரத்து அந்தப் பகுதி மக்களுக்கு ஆறுதலை தரும். தேர்தல் வேண்டாம் என்பதுதான் என் கருத்து’’ என்றார்.

’’இடைத்தேர்தல் நடக்கலாம், நடக்காமலும் போகலாம்’’ என்று கூறியிருந்தது பற்றி கேட்டபோது, ‘’அதை, அரசியல் ரீதியாக கணித்து சொல் கிறேன் அவ்வளவுதான். தேர்தல் ஆணையம் மாவட்ட அதிகாரிகளிடம் கருத்து கேட்கும்போது, எல்லோருமே வேண்டாம் என்று சொல்லி யிருக்கிறார்கள். அதை வைத்து அப்படி கணித்துச் சொன்னேன்’’ என்று சிரித்துக்கொண்டே சொன்னார். 

loading...

Advertisement

Advertisement

Advertisement