[X] Close

நிலவின் மறுபக்கத்தை ஆராய முயற்சிக்கும் சீனா!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பூமியை பார்த்தவாறு தெரியும் நிலவின் ஒரு பக்கத்தை மட்டுமே இதுவரை உலக நாடுகள் ஆய்வு செய்து வந்த நிலையில், அதன் மறுபக்கத்தை சீனா ஆராய முயற்சிப்பது ஏன் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.


Advertisement

பூமியின் துணைகோள் நிலா. பூமி எந்தப் பக்கத்தில் சுற்றுகிறதோ, அதே பக்கத்தில்தான் நிலவும் சுற்றுகிறது. இதன் காரணமாக அதன் மறுபக்கத்தை பூமியில் இருந்து நம்மால் காண முடியாது. நிலவை அடிப்படையாக வைத்தே மேற்கத்திய நாடுகள் நாள்காட்டிகளை அமைத்திருக்கின்றன. இந்தியாவில் தோன்றிய வானியல் சாஸ்திரங்களும் நிலவுக்கு பெரும் முக்கியத்துவம் அளித்துள்ளன. பல நூறு ஆண்டுகள் கழித்து நிகழப் போகும் கிரகணங்களையும் இந்திய வானியல் சாஸ்திரங்கள் துல்லியமாக கணித்து கூறியுள்ளன. அந்த அளவுக்கு பூமிக்கும், நிலவுக்குமான நெருக்கமான தொடர்பு நீண்டு கொண்டே வருகிறது.


Advertisement

முதன்முதலாக கடந்த 1972 ஆம் ஆண்டு நிலவில் கால்பதிப்பதற்கான அப்போலோ திட்டத்தை அமெரிக்கா வகுத்தது. அமெரிக்க விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்டராங் முதன்முதலாக கால்பதித்தார். அதற்குப் பின் 1976 ஆம் ஆண்டு ரஷ்யா ஆளில்லா விண்கலத்தை நிலவுக்கு அனுப்பி வைத்தது. கடைசியாக சந்திராயன் திட்டம் மூலம் இந்தியா நிலவில் கொடி நாட்டியிருந்தது. இப்படி அடுத்தடுத்த ஆய்வுகள் மூலம் அதன் மேற்பரப்பு, ஈர்ப்பு விசை என பல்வேறு தகவல்கள் சேகரிக்கப்பட்டாலும், நிலவின் மறுபக்கத்தில் என்ன இருக்கிறது என்பது புரியாத புதிராகவே இருந்து வந்தது. 

தற்போது அதற்கு விடை காணும் வகையில் ஆளில்லா விண்கலத்தை அனுப்பி இருக்கிறது சீனா. தாதுக்கள் மற்றும் கனிமங்கள் கொட்டிக் கிடக்கும் பொக்கிஷமாக நிலவு இருப்பதால், அதன் மறுபக்கத்தை ஆய்வு செய்வதற்காக ஆளில்லா விண்கலத்தை அனுப்பி இருப்பதாக தெரிவிக்கிறார் சீன விஞ்ஞானியும் பேராசிரியருமான யங் ஜியுவான்.

மேலும் பேசிய அவர், நிலவில் ஹீலியம் என்ற வாயு அதிகம் காணப்படுகிறது. அதன் அடர்த்தியை ஆய்வு செய்வதற்காக இந்தத் திட்டம் வகுக்கப்பட்டது. இது தவிர விண்வெளித்துறைக்கு தேவையான தொழில்நுட்பங்களை மேம்படுத்தும் நோக்கில் இந்தத் திட்டத்தை செயல்படுத்த நினைத்தோம். 


Advertisement

மேலும் பூமியின் சகோதர, சகோதரிகளாக இருக்கும் மற்ற கோள்களின் நிலை, அதன் பிறப்பு, பரிணாம வளர்ச்சி ஆகியவற்றை தெரிந்து கொள்வதற்காகவும் நிலவின் மறுபக்கத்தை ஆராய முடிவு எடுத்தோம். அதுவுமில்லாமல் இதுவரை எந்த நாடும் மேற்கொள்ளாத ஆராய்ச்சி என்பதன் மூலம் பெருமை கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார். அணுமின் உற்பத்திக்கு முக்கிய எரிபொருளாக இருக்கும் ஹீலியம் - 3 என்ற வாயு நிலவில் அதிக அளவில் கிடைப்பதாக கூறப்படுகிறது. இந்த வாயுவை பூமிக்கு கடத்தி வருவதன் மூலம், சுமார் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு தேவையான எரிசக்தி மனிதர்களுக்கு கிடைக்கும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

இது தவிர நிலவில் டைட்டானியம், யூரேனியம் போன்ற அணுசக்திக்கு தேவையான மூலப் பொருட்களும் கொட்டி கிடக்கின்றன. எதிர்காலத்தில் பூமியின் தேவைக்காக அந்த மூலப் பொருட்களையும் கொண்டு வர முடியும். தற்போது அந்த மூலப் பொருட்களை கடத்தி வருவதற்கு அதிக பொருட் செலவு ஆகலாம். எனினும் வருங்காலத்தில் அதை குறைப்பதற்கான சாத்தியகூறுகள் அதிகம் இருப்பதால், நிலவில் இருந்து பூமிக்கு டைட்டானியம் இறக்குமதி ஆகும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

சீனாவின் இந்த முயற்சி குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரிட்டனை சேர்ந்த விண்வெளி பேராசிரியர் ரிச்சர்ட், ஆளில்லா விண்கலத்தை அனுப்பி சீனா வரலாற்று சாதனை படைத்திருக்கும் நிலையில், அடுத்ததாக மனிதர்களை அனுப்பி வைப்பதற்கான திட்டத்தையும் செயல்படுத்த மும்முரம் காட்டி வருகிறது. இதன் காரணமாக வரும் 2025 ஆம் ஆண்டுக்குள் நிலவுக்கு சீனா மனிதர்களை அனுப்பி வைக்கும் என்று தெரிவித்துள்ளார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement